எனக்கு எந்த பவரும் இல்லை...கதறி அழும் மதுமிதா

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நான்காவது வாரத்தின் நிறைவு பகுதியை நெருங்கி வருகிறது. நிகழ்ச்சியின் 25 ம் நாளான இன்று நாள் முழுவதும் விவாதம், சமாதானம் என்றே சென்றது.

இது நெருப்பு ஆற்றலுக்கான வாரம் என பிக்பாஸ் அறிவித்ததால், நெருப்பு காயின் வைத்திருக்கும் இசைவாணிக்கு அதிக பவர்களை கொடுக்கிறார். அவர் என்ன ரூல்ஸ் வேண்டுமானாலும் போடலாம். அவர் காயினை வைத்த பிறகு தான் சமைக்க வேண்டும், அவர் சொல்வதை தான் சமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல அதிகாரங்களை கொடுத்தார்.

ஈகோவாக உருவான பவர்

ஈகோவாக உருவான பவர்

இதனால் யாருக்கு அதிக அதிகாரம் என்ற விவாதம் வீட்டிற்குள் நடந்து வருகிறது. இது மதுமிதா மற்றும் இசைவாணி இடையே மோதலை உருவாக்கி, ஈகோ பிரச்சனையை கிளப்பி உள்ளது. இசைவாணி அதிக அதிகாரத்துடன் நடப்பதை, சர்வாதிகாரி போக்குடன் நடப்பதாக இமான் அண்ணாச்சி நேருக்கு நேராக கூறினார்.

கண்ணீர் விட்ட இசைவாணி

கண்ணீர் விட்ட இசைவாணி


இதனால் மனவருத்தம் அடைந்த இசைவாணி, உடைமாற்றும் அறைக்கு சென்று கதறி அழுகிறார். அவரை பிரியங்கா, சின்ன பொண்ணு, மதுமிதா ஆகியோர் சமாதானப்படுத்த முயல்கிறார்கள். தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அழும் இசைவாணியிடம், மதுமிதா, இருவரும் ஒன்றாக இணைந்து, பேசி அனைத்தையும் செய்வோம் என்கிறார்.

சமாதானப்படுத்தும் அண்ணாச்சி

சமாதானப்படுத்தும் அண்ணாச்சி

அப்போது அங்கு வரும் இமான் அண்ணாச்சி, ராஜு ஆகியோர் இசைவாணியை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்கள். அண்ணாச்சி தான் சொன்னதை விளக்கி சொல்ல முயல்கிறார். இருந்தாலும் அதை இசைவாணி ஏற்காமல் இருக்கிறார்.

எனக்கு பவரே இல்லை

எனக்கு பவரே இல்லை

அவர்களிடம் பேசி விட்டு வீட்டிற்குள் வரும் மதுமிதா, சிபி, ஐக்கி பெர்ரி, ராஜு ஆகியோரிடம் தனக்கு இந்த வீட்டில் எந்த பவரும் இல்லை. தான் எதற்காக கேப்டனாக இருக்கிறேன் என தெரியவில்லை. யாரை தூங்க வேண்டாம் என சொல்லும் வேலையை மட்டுமே நான் பார்க்கிறேன். நான் சொல்வதா யாரும் காது கொடுத்து கேட்பதில்லை. இந்த வீட்டில் தான் வேஸ்டாக இருப்பதாக கூறி கதறி அழுகிறார்.

சமாதானப்படுத்தும் நபர்கள்

சமாதானப்படுத்தும் நபர்கள்


மதுமிதாவை வீட்டில் உள்ள அனைவரும் சமாதானப்படுத்துகிறார்கள். உன்னை யாரும் அப்படி நினைக்கவில்லை. நீ ஏன் உன்னை தாழ்த்தி நினைத்துக் கொள்கிறாய் என சமாதானப்படுத்துகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X