தமிழ்ல நான் பட்ட பாடு இருக்கே...ஐயையோ... விரக்தியில் ஹீரோயின்!
சென்னை: தமிழ் சினிமாவில் நடித்தபோது பல கஷ்டங்களை அனுபவித்தேன் என்று நடிகை ஹனிரோஸ் தெரிவித்துள்ளார்.
தமிழில், விக்ராந்த் ஜோடியாக முதல் கனவே, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரஇ இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஹனிரோஸ். இவர் இப்போது மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் தான் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகும்போது, அதை முதலில் இயக்குனர் வினயனிடம் தான் தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், சினிமாவில் ஒருவரை ஒருவர் அறிந்திருப்போம். நமக்கு எல்லோரையும் தெரியும். நான் ஒரு கதையை தேர்வு செய்தாலும் படத்தில் கமிட் ஆனாலும் முதலில் இயக்குனர் வினயன் சாரிடம்தான் சொல்வேன். அவர் எப்படி வழிகாட்டுகிறாரோ அதையே பின்பற்றுகிறேன்.

ஆரம்பத்தில் சில தமிழ்ப் படங்களில் நடித்தேன். அந்த நாட்களை என்னால் மறக்க முடியாது. அவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தேன். மானேஜர், இந்தப் படத்தில் நடிங்கள் என்று சொல்வார்கள். இதில் நடித்தால் பெரிய இடத்துக்குப் போகலாம் என்பார்கள்.
அதை நம்பி கமிட் ஆவோம். படம் ஆரம்பித்த பின்தான் தெரியும், அது ஒரு விதத்திலும் உதவாது என்பது. சிலர் மனரீதியாக துன்புறுத்தத் தொடங்குவார்கள். தாங்க முடியாததாக இருக்கும். எல்லாவற்றையும் அனுபவத்தில் இருந்துதானே கற்றுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











