twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீராத மன அழுத்தம், பதட்டம், பீதி.. எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது.. பிரபல நடிகை திடுக் தகவல்!

    By
    |

    கொச்சி: தனக்கும் தற்கொலை எண்ணம் இருந்தது என்று பிரபல நடிகை சனுஷா கூறியுள்ளார்.

    தமிழில் பன்னீர் செல்வம் இயக்கிய ரேனிகுண்டா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை சனுஷா.

    இதில் ஹீரோவாக ஜானி நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து வினயன் இயக்கிய, நாளை நமதே படத்தில் நடித்தார்.

    குறும்படமே தேவையில்ல.. பச்சையாய் குரூப்பிஸத்தை நிரூபித்த ஹவுஸ்மேட்ஸ்.. அதகளப்படுத்திய அங்கிள்! குறும்படமே தேவையில்ல.. பச்சையாய் குரூப்பிஸத்தை நிரூபித்த ஹவுஸ்மேட்ஸ்.. அதகளப்படுத்திய அங்கிள்!

    குழந்தை நட்சத்திரம்

    குழந்தை நட்சத்திரம்

    அதற்கு முன்னதாக, விக்ரமின் காசி, பீமா படங்களில் நடித்துள்ளார். நந்தி, எத்தன், கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்பட சில படங்களில் நடித்த இவர், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர். தெலுங்கிலும் நடித்துள்ளார்.

    மன ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    கொரோனா தொற்று காரணமாக, மன ஆரோக்கியம் பற்றி பேச்சு பரவலாக எழுந்துள்ளது. நடிகை ஸ்ருதிஹாசன் உள்பட பல நடிகைகள் இதுபற்றி பேசி வருகின்றனர். மன அழுத்தத்தில் இருந்து விடுபட தாங்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக்கொண்டதாகவும் மக்களும் அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    தற்கொலை எண்ணம்

    தற்கொலை எண்ணம்

    இந்நிலையில் நடிகை சனுஷா, மன அழுத்தம் காரணமாக தனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, தனிப்பட்ட
    முறையிலும் தொழில் ரீதியாகவும் கடினமான சூழ்நிலையை நான் எதிர்கொண்டேன். இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை.

    வயநாடு சென்றோம்

    வயநாடு சென்றோம்

    நான் மனச்சோர்வு, பதட்டம், பீதியுடன் போராடிக் கொண்டிருந்தேன். யாருடனும் பேசவும் எனக்கு விருப்பம் வரவில்லை. தற்கொலை எண்ணமும் இருந்தது. எனக்கு வேண்டிய ஒருவரை தொடர்பு கொண்டேன். பின்னர் காரை எடுத்துக்கொண்டு ஒரு மாற்றத்துக்காக நாங்கள் வயநாடு சென்றோம்.

    மனநல மருத்துவர்

    மனநல மருத்துவர்

    எனக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி என் குடும்பத்தினரிடம் தெரிவிக்கக் கூட பயந்தேன். ஏதும் நினைப்பார்களோ என நினைத்தேன். பைத்தியக்காரர்கள்தான் மனநல மருத்துவரைச் சந்திப்பதாக மக்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் ரகசியமாக மனநல மருத்துவரை அணுகி மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினேன்.

    யோகா, நடனம்

    யோகா, நடனம்

    என்னை மேம்படுத்த யோகாவையும் நடனத்தையும் தொடங்கினேன். கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பல இடங்களுக்குச் சென்றேன். இப்போது நன்றாக உணர்கிறேன். இந்த வாழ்க்கையை அதிகமாக நேசிக்கிறேன். அதற்காக என்னை நினைத்தே பெருமைபடுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார் சனுஷா.

    English summary
    Actess Sanusha, has opened up about her battle with depression and anxiety.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X