தற்கொலை செய்தால் 'அந்த பிரச்சனை' தீர்ந்துவிடும் என நினைத்தேன்: இலியானா பகீர்
மும்பை: மனச்சிதைவு, மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் எண்ணம் ஏற்பட்டதாக நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.
டோலிவுட்டில் இருந்து சென்று பாலிவுட்டில் செட்டிலானவர் இலியானா. ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆன்ட்ரூ நீபோனை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இலியானா பேசியதாவது,

தெரியாது
ஒரு காலத்தில் எப்பொழுது பார்த்தாலும் சோர்வாகவும், கவலையாகவும் இருப்பேன். உதவி பெறும் வரை எனக்கு பாடி டிஸ்மார்பிக் டிஸ்ஆர்டர்(தோற்றத்தில் குறைபாடு இருக்கிறதோ என்ற எண்ணம், ஒரு வகையான மனச்சிதைவு) இருப்பது தெரியாது.

போதும்
சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட நினைத்திருக்கிறேன். தற்கொலை செய்தால் பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என கருதினேன்.

உண்மை
மனஅழுத்தம் என்பது கற்பனை அல்ல. அது நிஜம். அது தானாக சரியாகிவிடும் என்று நினைக்க வேண்டாம். தயவு செய்து சிகிச்சை பெறுங்கள். சிகிச்சை பெறுவது கட்டாயம் ஆகும்.

அழகு
நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக் கொள்வது நல்லது. நடிகர், நடிகைகளை பாருங்க அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அழகாக தெரிய நாங்கள் 2 மணிநேரமாக மேக்கப் போட்டு ரெடியாகுகிறோம்.

மனிதர்கள்
உங்களின் மனம் அழகாக இருந்தால் நீங்கள் அழகு தான். மனஅழுத்தம் ஒரே நாளில் சரியாகிவிடாது. படிப்படியாக தான் சரியாகும். பொறுமையாக இருக்க வேண்டும் என்றார் இலியானா.


Click it and Unblock the Notifications











