நல்ல கதைக்காக இத்தனை நாள் காத்திருந்தேன்- உற்றான் நாயகி பிரியங்கா நாயர்

சென்னை: வெகு நாட்களாக சிறப்பான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த பிரியங்காவிற்கு உற்றான் படம் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இவ்வளவு நாட்கள் காத்திருந்ததன் பலன் இன்று கிடைத்துவிட்டது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் பிரியங்கா நாயர். நடிகை பிரியங்கா நாயர் வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இரண்டு மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

ராஜா கஜினி இயக்கி தயாரிக்கும் திரைப்படம் உற்றான். இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படியாக கொண்டு எடுக்கப்பட்ட கதை. 1994ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த உண்மை சம்பவம். கல்லூரி மாணவன் ஒருவனின் வாழ்க்கையை சின்ன ஸ்க்ரு ஒன்று எப்படி புரட்டிபோடுகிறது என்பது தான் கதை.

I had waited so many years for a good story-Priyanka Nair

இப்படத்தை ஒரு புது முயற்சியுடன் படைத்திருக்கிறார் இயக்குனர். உற்றான் படத்தில் ரோஷன் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஹிரோஷினி கோமலி அறிமுகமாகிறார். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் புகழ் பெற்ற மிமிக்கிரி கலைஞர்களான கோமலி சிஸ்டர்ஸ்சில் ஒருவர் தான் ஹிரோஷினி. ஒரு நகைச்சுவை நடிகைக்கு வாய்ப்பளித்து ஹீரோயின் ஆக்கி இருக்கிறார் ராஜா கஜினி.

அதோடு, இப்படத்தில் வெயில் படத்தில் நடித்து உருகுதே மருகுதே பாடல் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமான ஹீரோயின் பிரியங்கா நாயர், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியையாக கமலி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமான பங்களிப்பை செய்துள்ளாராம். இந்தப்படத்தின் முதுகெலும்பான இந்த கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார் பிரியங்கா என்று தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர்.

உற்றான் படத்தில் கதாநாயகன் ஒரு காட்சியில் நிர்வாணமாக நடித்துள்ளார். அவருக்கு உள்ளாடை மாற்றும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரியங்கா. தமிழ் சினிமாவில் இதுவரையில் யாரும் அரை நிர்வாணமாக நடித்திராத ஒரு காவல் நிலைய காட்சியில் படு தைரியமாக நடித்துள்ளார். அவர் எடுத்த அந்த சிரத்தை, துணிச்சல் தமிழ் சினிமாவில் நிச்சயம் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் என்கிறார் இயக்குனர் ராஜா கஜினி.

I had waited so many years for a good story-Priyanka Nair

வெகு நாட்களாக சிறப்பான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த பிரியங்காவிற்கு உற்றான் படம் நல்ல ஒரு பெயரை பெற்று தரும். இவ்வளவு நாட்கள் காத்திருந்ததன் பலன் இன்று கிடைத்துவிட்டது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார் பிரியங்கா. இந்த பட வாய்ப்பு தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு மறுபிரவேசமாக அமையும் என்கிறார் இயக்குநர் ராஜா கஜினி.

இத்திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இயக்குநர் ஓ.ராஜா, உற்றான் கதையை நடிகை பிரியங்காவிடம் சொன்னபோது, கதையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இத்தனை காலம் இது போன்ற கதாபாத்திரத்திற்காகத்தான் காத்திருந்தேன். இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க நல்ல வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று பிரியங்கா தெரிவித்ததாக சொன்னார். இப்படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர். மற்ற தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்.

More from Filmibeat

Read more about: priyanka nair
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X