பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி சேரனை காப்பாற்றவேண்டும்-அமீர்

Recommended Video

Bigg Boss வீட அடிச்சு நொறுக்கி Cheran-ன காப்பாத்த போறேன்- வீடியோ

சென்னை: எனக்கு வரும் ஆத்திரத்தில் இப்போதே பிக் பாஸ் வீட்டை உடைத்து இயக்குநர் சேரனை அழைத்து வரவேண்டும் என்று ஆத்திரம் வருகிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி குறிப்பிட்டு ஆத்திரப்பட்டுள்ளார்.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தினந்தோறும் புதுப்புது பிரச்சனைகள் முளைத்துக்கொண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைக்கு நடிகை மதுமிதா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகரும் இயக்குநருமான சேரனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இவரை நடிகர் சித்தப்பு சரவணன், பொது வெளியில் மரியாதைக்குறைவாக பேசியதைக் கண்டு முதலில் ரமேஷ் கண்ணா பொங்கி தீர்த்தார். தனிப்பட்ட முறையில் எப்படி வேண்டுமானலும் அழைத்துக்கொண்டால் பரவாயில்லை.

சேரனுக்கு பிரச்சினை

சேரனுக்கு பிரச்சினை

லட்சக்கணக்கானவர்கள் பார்க்கும் நிகழ்ச்சியில் இப்படி பொது வெளியில் சேரனை இப்படி மரியாதைக் குறைவாக நடத்தியது தவறு என்றும் அதற்காக சரவணன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அடுத்ததாக, இயக்குநர் வசந்த பாலன் பகிரங்கமாகவே சரவணனை கண்டித்ததோடு, சேரனையும் உடனடியாக பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வரச் சொல்லி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

சரவணன் வெளியேற்றம்

சரவணன் வெளியேற்றம்

இவர் பேசிய அடுத்த சில தினங்களுக்கு நடிகர் சித்தப்பு சரவணன் வெளியேற்றப்பட்டார். இவர் வெளியேற்றப்பட்டதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. நடிகரும் இயக்குநருமான சேரனை ஒருமையில் வாடா போடா என்று அழைத்தது என பரபரப்பாக பேசப்பட்டது. ஆக மொத்தத்தில், சேரனை மரியாதைக்குறைவாக பேசிய சரவணனைக் கண்டித்து ஒட்டுமொத்த திரையுலகமே ஒன்று திரண்டு சேரனுக்காக வரிந்து கட்டி சரவணனை கண்டித்து துவைத்து தொங்கப் போட்டுவிட்டது.

அமீர் கொதிப்பு

அமீர் கொதிப்பு

இந்நிலையில் நேற்று, 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்' என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் பேசிய நடிகரும் இயக்குநர் அமீர், எனக்கு வரும் ஆத்திரத்திற்கு பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி, அங்கிருந்து இயக்குநர் சேரனை அழைத்து வரவேண்டும் எனத் தோன்றுகிறது என்று ஆவேசப்பட்டார்.

சேரன் மீது மதிப்பு

சேரன் மீது மதிப்பு

நான், சேரன் அவர்களை மிகப்பெரிய இயக்குநராகவே பார்த்துக்கொண்டு வருகிறேன். சேரன் அவர்கள் முன்னணி இயக்குநராக இருக்கும்போது, நான் அப்போது தான் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தேன். அவருடைய ஆட்டோகிராஃப் படத்தை பார்த்து மெய் சிலிர்த்து போனேன்.
நான் அப்படி பார்த்த சேரன் அவர்கள் இப்பொழுது என்னுடைய குடும்ப நண்பராகவே மாறிவிட்டார். அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போதே என்னிடம் சொல்லிவிட்டு தான் போனார்.

ஆத்திரம் வருகிறது

ஆத்திரம் வருகிறது

இன்றைக்கு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமே, என்னுடைய நெருங்கிய நண்பர்கள் அழைத்ததால் தான். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பது கிடையாது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர், ஒரு வீடியோவை காட்டி இதை தயவு செய்து பாருங்களேன் என்று என்னிடம் காட்டினார். அதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் சேரனை, ஒருமையில் திட்டுகிறார். இன்னொரு பெண், அவர் என்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று புகார் சொல்கிறார். இதைக்கேட்டு துடித்துப்போன சேரன் கண்ணீர் வடிக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது எனக்குள் ஆத்திரம் பொங்குகிறது.

பிக்பாஸ் வீட்டை நொறுக்க வேண்டும்

பிக்பாஸ் வீட்டை நொறுக்க வேண்டும்

மக்கள் அனைவரும், இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டது போல தெரிகிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேசப்பேச எனக்குள் கோபம் கொப்பளிக்கிறது. அதிலும் சேரன் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பற்றி சொல்லும் போது என் மனம் அப்படியே துடித்துப்போகிறது. நான் நினைத்தால் பிக் பாஸ் ஸ்டுடியோவையே அடித்து நொறுக்கி போட்டுவிட்டு சேரனை அழைத்துகொண்டு வரமுடியும். ஆனால் நான் அதைச் செய்யாமல் அமைதி காக்கிறேன். எனக்கு பிடிக்காத ஒரு நிகழ்ச்சி உள்ளதென்றால் அது நிச்சயமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தான் என்று ஆத்திரம் தீர பொங்கித் தீர்த்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X