தனுஷ் பண்ண வேண்டிய படத்தை நான் பண்ணேன்.. அது எந்த படம் தெரியுமா!
சென்னை : ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானார் நடிகர் பரத்
வெயில்,காதல், எம் மகன், பட்டியல், நேபாளி என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நடிகராக மாறினார்
ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பரத் தனுஷ் நடிக்க இருந்த படத்தில் தான் நடித்ததாக சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

காதல்
தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி வந்த இயக்குனர் ஷங்கர் முதல் முறையாக முழுக்க முழுக்க அறிமுக நடிகர்களை வைத்து இயக்கிய படம் பாய்ஸ். 2003 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. குறிப்பாக தமிழ்நாடு அல்லாத மற்ற மாநிலங்களிலும் இந்த படத்திற்கான வரவேற்பு அமோகமாக இருந்தது. பாய்ஸ் வெற்றியை தொடர்ந்து செல்லமே படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்த பரத்திற்கு அதைத் தொடர்ந்து வெளியான காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது.

உண்மை சம்பவங்களை
இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் உண்மைக்கு மிக அருகில் இருப்பது போல எடுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட காதல் படத்தில் பரத் மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஜோடியாக சந்தியா நடித்து இந்தப் படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆக்சன் ஹீரோவாக
காதல், வெயில்,பட்டியல், நேபாளி, 555, எம் மகன் என தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகராகவும் மாறினார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகராக உள்ளார். ஆக்சன் ஹீரோவாக மாறிய ஒரு சில திரைப்படங்கள் பரத்துக்கு சரியாக போகாததால் அதன் பிறகும் வெளியான திரைப்படங்களும் சுமாரான வெற்றியை பெற்று தந்தது.

முதலில் தனுஷ் தான் ஹீரோ
இந்த நிலையில் கதைக்கு மட்டும் முக்கியத்துவம் தரும் கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் பரத் முன்னறிவான்,யாக்கை திரி,8, லவ் உள்ளிட்ட படங்களில் தற்போது தமிழில் நடித்து வருகிறார். தெலுங்கில் சுதீர் பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சினிமாவில் யார் எந்த கதையில் நடிப்பார்கள் என்று சொல்லவே முடியாது பல கதைகள் பல ஹீரோக்கள் நடிக்க இருந்து பின் கடைசியாக வேறு ஹீரோ நடித்து அந்த படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் பரத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "காதல்" படத்தில் முதலில் தனுஷ் தான் ஹீரோவாக நடிக்க இருந்தாராம்.

தனுஷும் ஒருவர்
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படத்தில் நடிக்க முதலில் பல நடிகர்களை அணுகப்பட்டது அதில் தனுஷும் ஒருவர் இந்தத் தகவலை தற்போது பரத் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார். காதல் பரத் நடித்து சூப்பர் ஹிட் பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதேபோல் பரத் நடிக்கயிருந்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து அந்தப் படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது இந்த தகவலையும் பரத் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











