வசூல்ராஜா படத்தில் கமல் சார் கிட்ட அசரவைக்கும் ஒரு கேள்வி கேட்டேன்... நடிகர் கருணாஸ்!
சென்னை : நாட்டுப்புற கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி புகழ் பெற்றவர் நடிகர் கருணாஸ்.
திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாஸ் அதில் வசூல்ராஜா படத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் கேட்ட அசர வைக்கும் கேள்வி குறித்து பகிர்ந்துள்ளார் .

மிகச்சிறந்த காமெடியனாக
மண் மனம் மாறாத கிராமத்து நாட்டுப்புற பாடல்களை பாடி மக்கள் மத்தியில் ஆதரவை பெற்ற கருணாஸ் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளியான நந்தாவில் காமெடியனாக அறிமுகமானார். பல மேடைகளில் தனது நாட்டுப்புற பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்த கருணாஸ் முதல் படத்திலேயே தன்னை மிகச்சிறந்த காமெடியனாக நிரூபித்தார். லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு பார்த்தவுடனேயே சிரிப்பும் வரக்கூடிய அளவிற்கு நந்தா படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

ஹீரோவாக
அதைத்தொடர்ந்து 123, பாபா, வில்லன்,ஏப்ரல் மாதத்தில், தம், புதிய கீதை, திருடா திருடி, பிதாமகன், இயற்கை என எண்ணற்ற வெற்றிப் படங்களில் காமெடியனாக நடித்த கருணாஸ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திண்டுக்கல் சாரதி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து பட்டையை கிளப்பியிருப்பார். மிக எதார்த்தமான நடிப்பை இப்படத்தில் காட்டியிருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போக திண்டுக்கல் சாரதி படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது. அதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி என்ற மற்றொரு படத்திலும் கருணாஸ் ஹீரோவாக நடித்தார்.

வசூல் ராஜா எம்பிபிஎஸ்
பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் கருணாஸ் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த l படம் வசூல் ராஜா எம்பிபிஎஸ். இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான வசூல்ராஜா படமும் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. கமல்ஹாசன்,பிரபு, நாகேஷ், சினேகா வையாபுரி, பிரகாஷ்ராஜ், கருணாஸ், என பலரது நடிப்பில் வெளியான இந்த படத்தில் கருணாஸ் காமெடி அனைவராலும் ரசிக்கப்பட்டது.
Recommended Video

அசரவைக்கும் கேள்வி கேட்டேன்
இந்த நிலையில் வசூல்ராஜா படத்தில் கலக்கப்போவது யாரு என்ற பாடல் படமாக்கப்பட்ட போது அனைவரும் பின்னால் நடனமாடிக் கொண்டிருந்த நிலையில் கமல்ஹாசன் மட்டும் ஒரு அடி முன்னால் நின்று ஆடிக் கொண்டு இருந்தாராம். கருணாஸ் உடனடியாக கமலஹாசனிடம் சார் நீங்க ஒரு அடி முன்னாடி நிக்கிறீங்க என கூறியுள்ளார் அதற்கு கமல்ஹாசன் எந்த பதிலுமே கூறாமல் ஒரு பார்வை மட்டும் பார்த்தாராம். அதன் பிறகுதான் புரிந்தது சினிமாவில் கத்துக்க வேண்டிய விஷயம் நிறைய இருக்கு என்று என நடிகர் கருணாஸ் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் வசூல்ராஜா படத்தில் நடந்த சுவாரசிய சம்பவத்தை ஒரு பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











