என் மனைவியிடம் கேட்கக்கூடாத கேள்வியை கேட்டேன்.. நடிகர் அருண் விஜய் !
சென்னை: வில்லனாக ரீஎன்ட்ரி கொடுத்து இப்பொழுது ஆக்ஷன் நாயகனாக பட்டையை கிளப்பி கொண்டுள்ளார் நடிகர் அருண் விஜய்
அக்னி சிறகுகள், பாக்ஸர்,யானை, பார்டர் என அடுத்தடுத்த திரைப்படங்கள் அருண் விஜய்க்கு வெளியாக உள்ளது
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் எந்த பொண்ணு கிட்டயும் கேட்கக்கூடாத கேள்விய என் மனைவி கிட்ட கேட்டேன் என அருண் விஜய் கூறியுள்ளார்

வில்லனாக மிரட்டிய அருண் விஜய்
தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக உள்ள விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தமிழ் சினிமாவில் இப்பொழுது சூப்பர் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்து கொண்டுள்ளார். 90களில் அறிமுகமான அருண் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு சரியான திரைப்படங்கள் எதுவும் வெற்றி படங்களாக அமையவில்லை. ஒரு கட்டத்தில் நடிப்பிலிருந்து விலக முடிவில் இருந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக மிரட்டிய அருண் விஜய்க்கு அந்த படம் மிகப்பெரிய கம்பேக்காக அமைந்ததோடு ரசிகர்கள் பட்டாளமும் இவரை பின் தொடர ஆரம்பித்தது

முதல் முறையாக ஹரியுடன் இணைந்துள்ள
என்னை அறிந்தால் கொடுத்த பெரும் ஆதரவை தொடர்ந்து அருண் விஜய் ஹீரோவாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார். கதைகளை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் முதல் முறையாக இயக்குநர் ஹரியுடன் இணைந்துள்ள திரைப்படம் யானை. இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்

அனைவரும் லவ் மேரேஜ்
சினம், பாக்ஸர், பார்டர், அக்னி சிறகுகள், யானை என அருண் விஜய்க்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் வரிசையாக ரிலீசாக உள்ளது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் மனைவி குறித்து அருண் விஜய் பேசியுள்ளது இப்பொழுது இணையதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
அருண் விஜய் குடும்பத்தில் அனைவரும் லவ் மேரேஜ் என்பதால் வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென உறுதியாக இருந்த அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

எந்த பொண்ணுகிட்டயும் கேட்கக்கூடாத கேள்வி
திருமணத்தன்று ஆர்த்தியிடம் அருண் விஜய் முதல்முறையாக கேட்ட கேள்வி எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டு இருக்கீங்க என்று... ஒரு பொண்ணுகிட்ட கேட்கக்கூடாத கேள்வின்னு அப்பதான் எனக்கு தெரிஞ்சது.. ஆனா அவங்க செம கூலா நீங்களே பார்த்து தெரிஞ்சுக்கோங்கன்னு காலை காட்டினாராம். மேலும் ஆர்த்திக்கும் அருண் விஜய்க்கும் இடையே நிறைய விஷயங்கள் ஒத்து போனது இருவருக்கும் இடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தியது என அந்த நேர்காணலில் அருண் விஜய் கூறியுள்ளது இப்பொழுது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











