பிரியா பவானி சங்கரை கதாநாயகியாக போட வேண்டாம் என்றேன்... இயக்குநர் ஹரி

சென்னை :நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்

Recommended Video

போலீஸ் Complaint ஆச்சுன்னா Production தான் பாத்துக்கணும் | Priya Bhavani Shankar Speech | #Kollywood

கை நிறைய படங்களில் நடித்து வரும் பிரிய பவனி சங்கர் இப்பொழுது அருண் விஜய்க்கு ஜோடியாக யானை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

யானை பட விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் மேடையில் பேசிய இயக்குநர் ஹரி, பிரியா பவானி சங்கரை கதாநாயகியாக போட வேண்டாம் என கூறினேன் என்று பேசியுள்ளார்

மிகவும் வசீகரித்த பிரியா

மிகவும் வசீகரித்த பிரியா

தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பிரியா பவானி சங்கர் மேயாதமான் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே ரசிகர்களை மிகவும் வசீகரித்த பிரியா பவானி சங்கர் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாக நடித்து இப்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வரும் இளம் நடிகைகளில் முன்னணி வகித்து வருகிறார். முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என அனைவரது திரைப்படங்களிலும் பாரபட்சம் பார்க்காமல் பிரியா பவானி சங்கர் நடித்து வருவது ஒருபுறம் இருந்தாலும் மற்றொருபுறம் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார்

அருண் விஜய் உடன் கூட்டணி

அருண் விஜய் உடன் கூட்டணி

ஆக்ஷன் காதல் சென்டிமென்ட் என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் இயக்குநர் ஹரி முதல் முறையாக அருண் விஜய் உடன் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் யானை. விஜய் மற்றும் ஹரி மிக நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் இன்று வரை எந்த ஒரு படத்திலும் பணியாற்றாமல் இருந்தனர் இந்த நிலையில் இந்த கூட்டணி முதல் முறையாக இணைந்துள்ள யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதிகா, யோகிபாபு சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரியா பவானி சங்கர் வேண்டாம்

பிரியா பவானி சங்கர் வேண்டாம்

அதிரடியான ஆக்சன் பின்னணியில் குடும்ப கதைக்களத்தில் உருவாக்கியுள்ள யானை படவிழாவில் டிரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் பேசிய இயக்குநர் ஹரி யானை படத்திற்கு கதாநாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிரியா பவனி சங்கர் பெயரும் அடிபட்டது அப்பொழுது பிரியா பவனி சங்கர் இப்பொழுதுதான் அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா என்ற படத்தில் நடித்தார் அதற்குள் இந்த படத்திலும் நடிக்க வேண்டாம் என அவரை ரிஜக்ட் செய்தேன்.

என்னுடைய கண் நகரவே இல்லை

என்னுடைய கண் நகரவே இல்லை

அதன்பிறகு ஒரு திருமணவிழாவில் பிரியாவை சந்திக்க நேர்ந்தது. இந்த நிகழ்ச்சி முழுவதும் பிரியா பவானி சங்கர் மீதிருந்து என்னுடைய கண் நகரவே இல்லை அதன் பிறகுதான் முடிவு செய்தேன் இந்த படத்தில் கட்டாயமாக பிரியா பவனி சங்கர் தான் ஹீரோயின் மாபியா எல்லாம் தூக்கி அந்த பக்கம் போடுங்க என முடிவு செய்தேன் என அந்த பட விழாவில் இயக்குநர் ஹரி இவ்வாறு பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X