விவேக் போன்ற ரசிகரை இனி எப்போது பார்ப்பேன்....இசைஞானியின் உருக்கமான வீடியோ

சென்னை : விவேக்கின் திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தொடர்ந்து பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் தங்களின் இரங்கலையும், விவேக் உடனான தங்களின் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

திரை பிரபலங்களும், ரசிகர்கள் பலரும் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். விவேக்கின் அரிய ஃபோட்டோக்கள், தங்களின் விருப்பமான விவேக் காமெடிகள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதுடன், விவேக்கின் மறைவிற்கு வருத்தம் தெரிவித்து மீம்களும் உருவாக்கி வருகின்றனர்.

மனதை நொக்கிய மறைவு

மனதை நொக்கிய மறைவு

இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, விவேக்கின் நினைவுகளை பகிர்ந்து உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவேக்கின் மறைவு என் மனதை நொருங்கச் செய்து விட்டது. என்னால் அதிலிருந்து வெளியே வர முடியவில்லை. இந்த செய்தியை கேட்டது முதல் என்னால் துக்கம் தாங்க முடியவில்லை.

என் ரசிகன் விவேக்

என் ரசிகன் விவேக்

விவேக்கிற்கு என் மீது மிகுந்த அன்பு, பாசம், மரியாதை வைத்திருந்தார். மதுரை அமெரிக்க கல்லூரியில் படிக்கும் போதே என் ரசிகராக இருந்தார். அவர் சமீபத்தில் என்னை சந்தித்து, தான் தற்போது செய்து வரும் வேலைகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

மனதை பகிர்ந்த விவேக்

மனதை பகிர்ந்த விவேக்

விவேக் எப்போதும் தன் வாழ்க்கையை பற்றிய விஷயங்களை என்னிடம் பகிர்ந்து கொள்வார். நான் அவரது முயற்சிகளில் அவரை ஊக்குவிப்பேன். சில உதவிகளையும், ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்வேன். அவர் சமீபத்தில் ஸ்டூடியோவிற்கு வந்து என்னை சந்திக்க அனுமதி கேட்டார்.

இனி எப்போது காண்பேன்

இனி எப்போது காண்பேன்

என் மீது அவ்வளவு பாசம் கொண்ட ஒரு ரசிகரை இனி எப்போது பார்ப்பேன் என தெரியவில்லை. அவர் மட்டுமல்ல அவரின் ஒட்டுமொத்த குடும்பமும் என் மீது பாசமும், மரியாதையும் வைத்துள்ளனர். அவரின் மறைவு எங்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தி

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஈடு செய்ய முடியாத இழப்பு

அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் தைரியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன். இந்த பெருந்துயரில் இருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X