'10 வருஷமா இடைவெளியே இல்லாம நடிச்சுட்டே இருந்ததுக்கு இது தேவைதான்..' ரஜினி பட ஹீரோயின் ஆசை!

By

மும்பை: பத்து வருடமாக இடைவெளியே இல்லாமல் நடித்ததற்கு இந்த இடைவெளி தேவையானது என்று ரஜினி பட ஹீரோயின் கூறியுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் சோனாக்‌ஷி. இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சரமாரி அவதூறு

சரமாரி அவதூறு

சல்மான் கானின் தபாங் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் சோனாக்‌ஷி. பாலிவுட்டில் நெபோடிசம் பற்றிய பேச்சு எழுந்தபோது, இவர் சமூக வலைதளப்பக்கங்களுக்கு சென்றும் ரசிகர்கள் சரமாரியாக அவதூறானக் கருத்துக்களை வெளியிட்டனர். இதனால், இவர் ட்விட்டரில் இருந்து விலகினார்.

தொடர்ந்து நடிப்பு

தொடர்ந்து நடிப்பு

இந்நிலையில் சோனாக்‌ஷா சின்ஹா, இந்த கொரோனா இடைவெளி தேவைதான் என்று கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: கடந்த 10 வருடமாக சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறேன். இவ்வளவு நீண்ட பிரேக் கிடைக்கும் என்று நினைக்கவில்லை. இடைவிடாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன்.

கொரோனா பிரேக்

கொரோனா பிரேக்

இந்த கொரோனா பிரேக், ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்று. மொத்த சினிமா துறையும் அப்படியே நின்றுபோனது, இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். கொரோனா தொற்று தீவிரமாவதற்கு முன், வெப் தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது சில படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.

ரசித்து நடித்தேன்

ரசித்து நடித்தேன்

நானும் படப்பிடிப்புக்குச் செல்ல ஆர்வமாக இருக்கிறேன். அதே நேரம், நாம் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். 'தபாங்' படத்தின் வெற்றி வணிகரீதியான நாயகியாக என்னை நிலை நிறுத்தியது. இதுபோன்ற கமர்சியல் படங்களில் நடித்ததை விரும்பினேன். ரசித்து நடித்தேன்.

டைட்டில் கேரக்டர்

டைட்டில் கேரக்டர்

ஏனென்றால் இந்த மாதிரியான படங்களைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அதை அதிகமாகவே ரசிப்பேன். இந்த வகை படங்கள்தான், ரசிகர்களிடம் சென்றடைய அதிகம் உதவியது. அதோடு, பெரிய ஹீரோ இல்லாத படங்களின் டைட்டில் கேரக்டர்களில் நடிக்கும் தைரியத்தைக் கொடுத்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X