Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விக்னேஷ் சிவனை இந்திக்கு போக சொன்னேன்... நடிகர் விஜய் சேதுபதி
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான நானும் ரவுடிதான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் என இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது
விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62வது படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனை இந்திக்கு போக சொன்னதாக கூறியுள்ளார்.
வீட்டுக்கே போக மாட்டியாண்ணா.. விடுதலை பட அப்டேட் கொடுத்த விஜய்சேதுபதி.. உருகும் ரசிகர்கள்!

ட்ரெண்டான காதல் படங்கள்
தமிழ் சினிமாவில் காதலை மிகவும் ப்ரெஷாக ட்ரெண்டாகவும் தமிழ் திரைப்படங்களில் காட்டி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் காதலர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இன்றுவரை போடா போடி திரைப்படம் ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது போடா போடி வசூல் ரீதியாக சற்று பின்தங்கி இருந்தாலும் அப்போது வந்த காதல் படங்களிலேயே மிகவும் வித்தியாசமான கண்டெண்ட் கொண்டு வெளியான படமாக அனைவராலும் பாராட்டப்பட்டது

நேச்சுரல் நடிப்பை
விஜய்சேதுபதியை முரட்டுத்தனமான கதாபாத்திரங்களில் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ரொமாண்டிக் ஹீரோவாக நானும் ரவுடிதான் படத்தில் காட்டியிருப்பார் விக்னேஷ் சிவன். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாக பொருந்தி விஜய் சேதுபதி நானும் ரவுடிதான் படத்தில் டம்மி ரவுடியாக வித்தியாசம் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மேலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இந்த படத்தில் காது கேட்காத பெண்ணாக நடித்து நேச்சுரல் நடிப்பை வெளி படுத்தி இருப்பார்.

முக்கோணக் காதலை
விக்னேஷ் சிவன் நயன்தாரா விஜய் சேதுபதி அனிருத் கூட்டணியில் வெளியான நானும் ரவுடிதான் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல் முக்கோணக் காதலை மையமாகக் கொண்டு வெளியான இந்தப் படத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார். சமீபத்தில் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் அஜீத்தின் 62வது படத்தை நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

ஹிந்தியில் எடுன்னு பலமுறை சொன்னேன்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் ரைட்டிங் எனக்கு ரொம்பவே பிடிக்கும். எனக்கு போடா போடி ரைட்டிங் ரொம்பவே பிடித்திருந்தது. சூப்பரா எழுதி இருந்தாரு நான் இப்ப வரைக்கும் சொல்லிக்கிட்டு இருக்கேன் போடா போடி படத்தை ஹிந்தியில் எடுன்னு அந்த படம் எடுக்கக்கூடிய படம் தயவு செஞ்சு போ ஹிந்தில இந்தக்கதை இப்பவும் செட்டாகும் பழசாகாது என பல முறை கூறியதாக விஜய் சேதுபதி அந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.