பொண்டாட்டிக்கு தெரியாம வீட்டை விட்டு ஓடிப்போய் அந்த படத்துல நடிச்சேன்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் மிரட்டி வருகிறார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவருக்கு தெலுங்கு மற்றும் இந்தி பட உலகிலும் பல வாய்ப்புகள் குவிகிறது
இந்த நிலையில் தனது மனைவிக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் படத்தில் நடித்ததாக சுவாரசிய தகவலை விஜய்சேதுபதி பகிர்ந்துள்ளார்.

நெகட்டிவ் ரோலில்
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரன்டி. கட்டாயமாக அந்த படத்தை ரசிகர்கள் வெற்றி பெற செய்து விடுவார்கள் என்று இருக்கும் நிலையில் ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் ஒரு சில படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து வந்த விஜய் சேதுபதி ஹீரோவான பிறகு தொடர்ந்து வித்தியாச வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

கதாநாயகியின் தந்தை
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து இருப்பார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலான வில்லனாக பட்டையை கிளப்பியிருப்பார். விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவருக்குமே சரிசமமான கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்ததால் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் உப்பனா என்ற படத்திலும் நெகடிவ் கலந்த கதாநாயகியின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வசூலை வாரி குவித்தது.

வீட்டை விட்டு ஓடிப்போய்
இப்பொழுது பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தென்மேற்கு பருவக்காற்று. இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. எளிமையான கிராமத்து காதல் கதையை மையமாக கொண்டு வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நேச்சுரலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பல சுவாரஸ்யமான சம்பவங்களை கொண்ட தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த பின் மனைவியிடம் சொல்லாமலேயே வீட்டை விட்டு ஓடிப்போய் ரயிலில் ஏறி படப்பிடிப்புக்கு வந்து விட்டார்.

தென்மேற்கு பருவக்காற்று
தென்மேற்கு பருவக்காற்று படத்தில் முருகன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய விஜய்சேதுபதிக்கு இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் மனைவிக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் நடித்த சுவாரஸ்ய நிகழ்வை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











