த்ரிஷாவ பாத்தாலே எனக்கு அப்படி இருக்கு.. என்ன விஜய் சேதுபதி இப்படி சொல்லிட்டாரு!

சென்னை: மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

மனசெல்லாம், சாமி, லேசா லேசா, அலை, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.

நடிகை த்ரிஷாவை பற்றி விஜய் சேதுபதி கூறிய விஷயங்கள் தற்போது நெடிசன்கள் மத்தியில் ஒரு பேச்சு பொருளாக மாறி உள்ளது.

அமீர் இயக்கத்தில் ஹிட்

அமீர் இயக்கத்தில் ஹிட்

மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை த்ரிஷா. அமீர் எழுதி, இயக்கிய இந்த படத்தில் சூர்யா,த்ரிஷா, லைலா போன்ற பலர் நடித்திருந்தனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதன் பிறகு எனக்கு 20 உனக்கு 18, அலை, கில்லி, ஆயுத எழுத்து என்று தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்தார் நடிகை த்ரிஷா. தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

முன்னணி நடிகையாக த்ரிஷா

முன்னணி நடிகையாக த்ரிஷா

திருப்பாச்சி, கிரீடம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை த்ரிஷாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார் நடிகை த்ரிஷா. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரகுமான் .

ஜானு மாதிரி வராது

ஜானு மாதிரி வராது

சமீபத்தில் இவர் நடித்து வெளியான பேட்ட திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்ற போதிலும், இவரது கதாபாத்திரம் பேசும்படியாக இல்லை என்று ரசிகர்கள் கருத்தாக இருந்தது. நடிகை த்ரிஷா நடித்த 96 படம் தான் கடைசியாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த படத்தில் த்ரிஷாவுடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்தார். 96 படத்தில் ஜானு என்ற கதாபாத்திரம் த்ரிஷாவிற்கு மிக பலமாக அமைந்தது. த்ரிஷாவுடன் நடித்த அனுபவத்தை நடிகர் விஜய் சேதுபதி கூறிய விஷயம் தான் தற்போது நெட்டிசன்கள் இடையே பேச்சுப் பொருளாக மாறி உள்ளது.

நான் தான் சீனியர்

நான் தான் சீனியர்

த்ரிஷாவை பற்றி விஜய் சேதுபதி கூறுகையில், சின்ன வயசிலிருந்தே த்ரிஷாவை பார்த்தால் எனக்கு மிகவும் பயம், த்ரிஷாவின் பெயரைச் சொல்லித்தான் என் அம்மா என்னை மிரட்டுவார் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் த்ரிஷா தன்னைவிட மிகவும் வயதில் சிறியவர் என்றும் ஏழு எட்டு வருடங்கள் ஆவது வித்தியாசம் இருக்கும் என்றும் விஜய் சேதுபதி கூறியுள்ளார். அனைவரும் த்ரிஷாவை எனக்கு சீனியர் என்று கூறுகின்றனர். ஆனால் பெண்கள் எப்பொழுதும் சின்ன வயதிலேயே நடிக்க வந்து விடுவார்கள். அதனால் நடிப்பில் மட்டும் தான் த்ரிஷா எனக்கு சீனியர். வயதில் நான் தான் சீரியல் என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்

கடுப்பான நெட்டிசன்ஸ்

வயதில் உங்களை விட சிறியவராக இருக்கும் த்ரிஷாவை பார்த்தால் உங்களுக்கு எப்படி பயம் வரும். அவர் பள்ளி பருவத்தில் படிக்கும் பொழுது நீங்களும் பள்ளியில் தானே படித்து இருப்பீர்கள். உங்களை விட சின்ன பெண் தானே த்ரிஷா என்று நெட்டிசன்கள் நோண்டி கேள்வி கேட்கின்றனர். எதார்த்தமாக இருப்பது போல் விஜய் சேதுபதி நடித்து வருவதாகவும் பலர் கமெண்ட்டுகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். எது எப்படியோ 96 படம் பார்க்க ரசிக்கும் படியாக இருந்தது, மேலும் படம் பார்த்த அனைவருக்கும் தங்களது பழைய காதல் கண்டிப்பாக நினைவுக்கு வந்து இருக்கும். யார் சீனியராக இருந்தால் என்ன படத்தில் இந்த ஜோடியை ரசிகர்கள் இன்றும் ரசித்து கொண்டு தான் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X