குடும்பத்தால எல்லாமே இழந்துவிட்டேன்..அசீமிடம் கண்கலங்கிய ரச்சிதா!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ல் நிகழ்ச்சியில் கதை சொல்லட்டுமா, டான்ஸ் மராத்தான் என நிகழ்ச்சியின் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.
ஒரு கதை சொல்லட்டுமாடாஸ்கில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்களுடைய கதையை முழுமையாக சொல்லி முடித்து விட வேண்டும். அப்படி முடித்து விடுபவர்கள் அடுத்த வாரம் நாமினேஷனில் இடம் பெறமாட்டார்கள்.
ஆனால்,கதை பிடிக்காமல் போட்டியாளர்கள் ரெட் பட்டனை அழுத்திவிட்டால் கதைசொல்வதை நிறுத்த வேண்டும் அந்த போட்டியாளர் நாமினேஷனில் இடம் பெறுவார்.

கதை சொல்லட்டுமா
இந்த விதிமுறையுடன் கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் 21 பேருக்கும் ஒவ்வொரு நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், நம்பர் 1 அசீம் என்பதால் முதலில் அவர் கதை சொல்ல தொடங்கினார். ஆனால், அவர் கதையை கேட்கவிருப்பம் இல்லை என்பது போல போட்டியாளர்கள் அடுத்தடுத்து ரெட் பட்டனை அழுத்தி கதையை நிறுத்தி விட்டனர்.

மனைவிக்காக மதம் மாறினேன்
இதையடுத்து தனலட்சுமி, ஷிவானினி, தினேஷ் ஆகியோர் கதைககை சொன்னார்கள். தினேஷ் கதை சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என் மனைவிக்காக வேறு மதம் மாறினேன். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டோம்.

ரெட் பட்டனை அடித்தார்
எங்களுக்கு 8வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டே இருந்த போது, விவாகரத்து கதையை கேட்டு டென்ஷனான விஜே மகேஷ்வரி பட்டனை அழுத்தினார். அதே போல ஓடி வந்து ரச்சிதா பட்டனை அடித்ததில் பட்டனே வேலை செய்யவில்லை. இதனால், தினேஷூம் கதையை சொல்லாமல் பாதியிலேயே வெளியேறினார்.

வாழ்க்கையை தொலைத்தார்
இதையடுத்து, ரச்சிதா சக போட்டியாளரான குயின்ஸி, அசீமிடத்திலும் வருத்தத்துடன் பேசியுள்ளார். அதாவது, நான் குடும்பம் குடும்பம்னு பார்த்துத்தான் வாழ்க்கையில் எல்லாத்தையும் தொலைச்சிட்டேன். அடுத்து வரும் தலைமுறையில் கல்யாணம் பண்ணிப்பதைபற்றி யோசிக்க மாட்டாங்கனு நினைக்கும் போது வருத்தமா இருக்கு.

வருத்தத்துடன்
நான் பெங்களுரில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் நான் பார்ட்டிக்கு கூட போனது இல்லை. பெங்களுரில் பிறந்துட்டு பார்ட்டிக்கு போனது இல்லை என்று நண்பர்கள் கேட்பார்கள்.ஆனால், நான் குடும்பத்தை பார்த்து எல்லாத்தையும் இழந்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளையும் சந்தித்து இருக்கிறேன் என்று கவலையுடன் கூறியுள்ளார்.

கணவரை பிரிந்தார்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சீரியல் நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் விவாகரத்து பெறவில்லை என்றாலும், பிரிந்து தான் வாழ்த்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ரச்சிதா மகாலட்சுமிக்கு தினேஷ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











