twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றிட்டேன்: போனி கபூர் ஃபீலிங்

    By Siva
    |

    சென்னை: என் மனைவி ஸ்ரீதேவியின் கனவை நிறைவேற்றி வைத்துவிட்டேன் என்று கூறி எமோஷனல் ஆகியுள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

    ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தில் அஜித் கவுரவத் தோற்றத்தில் நடித்தார். அப்பொழுது அஜித்தை வைத்து தன் கணவர் போனி கபூர் ஒரு தமிழ் படத்தை தயாரிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி ஆசைப்பட்டார்.

    I have managed to fulfill my wife’s dream: Boney Kapoor

    பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சமூக அக்கறை கொண்ட படத்தில் அஜித்தை நடிக்க வைக்க விரும்பினார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் ஆசை நிறைவேறுவதற்குள் அவர் இறந்துவிட்டார்.

    மறைந்த தனது மனைவியின் ஆசையை நிறைவேற்ற அஜித்தை வைத்து பிங்க் படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார் போனி கபூர். ஹெச். வினோத் இயக்கியுள்ள நேர்கொண்ட பார்வை படம் வரும் 8ம் தேதி ரிலீஸாக உள்ளது.

    இந்நிலையில் இது குறித்து போனி கபூர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    நேர்கொண்ட பார்வை படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் துவங்க உள்ளது. என் மனைவி ஸ்ரீதேவி கபூரின் கனவை நிறைவேற்றி வைத்துள்ளேன்.

    அஜித் குமார், ஹெச். வினோத், கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது என்று தெரிவித்துள்ளார் போனி கபூர்.

    நேர்கொண்ட பார்வை படம் சிங்கப்பூரில் வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால் படம் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் போனி கபூர் சார் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படத்தையும் ஹெச். வினோத் தான் இயக்குகிறார், போனி கபூர் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைக்கு தல 60 என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படம் ரீமேக் கிடையாது, வினோத் அஜித்துக்காக எழுதி வைத்துள்ள கதை.

    English summary
    Boney Kapoor has managed to fulfill his late wife Sridevi's dream.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X