நான் சினிமாவை திருமணம் செய்து கொண்டேன்... மனைவி பெரிதாக தெரியவில்லை.. இயக்குனர் மிஷ்கின்
சென்னை: தமிழ் சினிமாவிற்கு மிக வித்தியாசமான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உள்ளார் இயக்குனர் மிஷ்கின்
பிசாசு கொடுத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இப்பொழுது இயக்கி வருகிறார்
இந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நேர்காணலில் பேசிய மிஷ்கின் நான் சினிமாவை திருமணம் செய்து கொண்டேன் மனைவி பெரிதாக தெரியவில்லை என ஓப்பனாக பேசியுள்ளார்.

எதார்த்தமான கதை களத்தில்
சித்திரம் பேசுதடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின் முதல் படத்திலேயே மிக வித்தியாசமான கதை களத்தை கையில் எடுத்துக்கொண்ட இவருக்கு இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றுத் தந்தது அதைத் தொடர்ந்து வெளியான அஞ்சாதே மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. நரேன், அஜ்மல் வித்தியாசமான நடிப்பில் மிகவும் எதார்த்தமான கதை களத்தில் வெளியான அஞ்சாதே படத்திற்குப் பிறகு மிஷ்கினுக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அழகான காதல் கதையை
நந்தலாலா,யுத்தம் செய் ,முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என வரிசையாக படங்களை இயக்கி வந்த மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. அதுவரை தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றால் மிக கொடூரமாக இருக்கும் என காட்டப்பட்டு வந்த நிலையில் பிசாசு படம் வித்தியாசமான ஹாரர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது இந்த படத்தில் அழகான காதல் கதையையும் தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தையும் இணைத்து விசித்திரமான பேய் படமாக மிஷ்கின் காட்டியிருந்தது அனைவரையும் கவர்ந்தது. பிசாசு படம் மாபெரும் வெற்றி பெற்றது

பிசாசு பாகம் இரண்டு
இந்த நிலையில் அடுத்ததாக பிசாசு பாகம் இரண்டை தற்போது இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா இந்த படத்தில் ரோலில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி பூர்ணா சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிசாசு 2 படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்டது இப்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டுள்ளது இப்படத்திற்கு கார்த்திக்ராஜா இசையமைத்து வருகிறார்.

சினிமாவை கல்யாணம் செய்து கொண்டேன்
பல இயக்குனர்களும் சினிமாவை ஒரு வியாபாரமாக நினைத்தாலும் மிஷ்கின் மட்டும் சினிமாவை மூச்சாக நினைத்து வியாபார நோக்கில் இல்லாமல் நல்ல படங்களை கொடுத்து வருகிறார் இந்த நிலையில் தனியார் சேனல் ஒன்றில் நேர்காணலில் பேசிய மிஷ்கின் நான் சினிமாவை திருமணம் செய்து கொண்டேன். அதனால் என்னுடைய மகளை என் மனைவியிடம் விட்டுவிட்டேன். நானும் என் மனைவியும் இப்பொழுது பிரிந்து வாழ்கிறோம். எனக்கு சினிமா போதும் அது தான் என் வாழ்க்கை என நெகிழ்ந்து பேசியுள்ளார். இந்த வீடியோ இப்பொழுது சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











