“அதெல்லாம் பொய் நம்பாதீங்க”.. சம்பளம் பற்றி விமர்சித்தவர்களுக்கு யோகி பாபு பதிலடி!
தனது சம்பளம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் யோகி பாபு.
Recommended Video
சென்னை: தான் அதிக சம்பளம் வாங்குவதாகக் கூறுவது பொய் என்று காமெடி நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.
யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் படம் தர்மபிரபு. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தர்மபிரபு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் யோகி பாபு கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், தான் அதிக சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுவது பொய் எனக் கூறினார்.

கதாநாயகன்:
மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது, " இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். எமலோகத்தில் நான் கதாநாயகனாகவும், பூலோகத்தில் சாம் கதாநாயகனாகவும் நடித்துள்ளோம். இந்த படத்தின் இயக்குனர் முத்துக்குமரனும் நானும் 15 வருட நண்பர்கள்.
லொள்ளு சபா சம்பளம்:
அவர் கூறியது உண்மைதான். நான் ‘லொள்ளு சபா'வில் இருந்து கொண்டு வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டோம். சில நாட்கள் சாப்பிடாமல் கூட மொட்டை மாடியில் படுத்து உறங்கியிருக்கிறோம். இந்த சமயத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு பேசிய கதை இப்போது படமாக வந்திருக்கிறது.

நட்புக்காக:
இப்படத்தைப் பற்றி கூறி, இப்படத்தில் நடிப்பீர்களா? தேதி கிடைக்குமா? என்று முத்துக்குமார் கேட்டதும் ஒப்புக் கொண்டேன். அதே சமயத்தில் ‘கூர்கா' படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டேன். இரு இயக்குநர்களும் நண்பர்கள் என்பதால் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன்.

வெற்றி:
யாரும் இல்லாத இடத்திற்கு நான் வந்திருக்கிறேன் என்று கூறினார்கள். யாரும் இல்லாத இடத்தில் விளையாட முடியாது. எல்லோரும் இருக்கிறார்கள். அதில் அவரவர் பணியைச் சிறப்பாக செய்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.

ரேகா ஜோடி:
சில இடங்களில் நான் பேசும் வசனங்களைப் பார்த்து படப்பிடிப்பு தளத்தில் பயந்திருக்கிறார்கள். என் வாழ்க்கையில் காலம் கடந்து இப்படம் இருக்கும். ‘ஆண்டவன் கட்டளை‘, ‘பரியேறும் பெருமாள்' வரிசையில் இப்படமும் அமையும். விரைவில் நானும், ரேகாவும் இணைந்து நடிப்போம்.

வருமான வரி :
நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். நிறைய படங்களில் நான் நடித்தற்கான பணம் இன்னும் வரவில்லை. இதனால் ரூ.20 லட்சம் வருமான வரி கட்டாமல் இருக்கிறேன்.

விளக்கம்:
10, 15 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஆள் நான் இல்லை. நேற்று கூட தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருவர் வந்து பேசினார். நான் ஜெயித்தால் என் குடும்பம் வாழும் என்றார். அவருக்காக எனது சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொண்டு, அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளேன். எனவே வெளியில் சொல்வதை நம்பாதீர்கள் ", என யோகி பாபு கூறினார்.


Click it and Unblock the Notifications











