வேலையில்லா பட்டதாரியில் விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்... இயக்குனர் விக்னேஷ் சிவன்
சென்னை: இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்ரெண்டியான காதல் படங்களை எடுத்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார்
நானும் ரவுடிதான் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் இணைந்தது
அந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் வேலையில்லா பட்டதாரி படத்தில் விருப்பம் இல்லாம தான் நடித்தேன் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

கேஷுவலான காதல் கதையில்
வித்தியாசமான ட்ரெண்டிங்கானா காதல் படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனி இடத்தை பிடித்துள்ள வர் இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு அதைத் தொடர்ந்து வெளியான நானும் ரவுடி தான் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கேஷுவலான காதல் கதையில் வெளியாகி ரசிகர்கள் இப்படம் வெகுவாக ஈர்த்தது விஜய் சேதுபதி டம்மி ரவுடியாக இந்த படத்தில் நடித்திருப்பார் நயன்தாரா காது கேட்காத பெண்மணியாகவும் நடித்து அசத்தி இருப்பார்கள்

காத்துவாக்குல ரெண்டு காதல்
நானும் ரவுடி தான் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவன் சூர்யா கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படமும் நல்ல வெற்றியை பெற்றது விலையில் ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நானும் ரவுடி தான் கூட்டணி மீண்டும் இணைய காத்துவாக்குல ரெண்டு காதல் உருவானது காதலை வித்தியாசமாக அனைவருக்கும் பிடிக்கும் வகையில்
எளிதான முறையில் தன்னுடைய படங்களில் காட்டிய சிவன் தன் படங்களில் பெரும்பாலான பாடல்களை அவரே எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். கதை எழுதுவதில் மட்டுமல்லாமல் பாடல்களில் தான் ஒரு சிறந்த வர் என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் இதே பற்றி வரும் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் முக்கோண காதல் கதையை மிக அழகாக செதுக்கி இருப்பார். சேதுபதி நயன்தாராவுடன் இணைந்து இந்த படத்தை சமந்தாவும் நடித்திருக்க இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது

அறிமுகமானது நடிகராக
அடுத்ததாக அஜித்தின் 62 வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பெருமளவில் உள்ளனர். இப்பொழுது பிரபலமான இயக்குனராக இருந்தாலும் வினேஷ் சிவன் முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகமானது நடிகராக தான். வேலையில்லா பட்டதாரியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்னேஷ் நடித்திருப்பார். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் விருப்பம் இல்லாமல் தான் நடித்ததாக சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

விருப்பம் இல்லாமல் தான் நடித்தேன்
வேலையில்லா பட்டதாரியில் தனுஷுடன் இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது அந்த கதாபாத்திரத்திற்கு வரவேண்டிய பையன் அன்று வரவில்லை அதனால தனுஷ் என்னை அந்த ரோலில் நடிக்க சொல்லி நடிக்க வைத்தார். அதுவே அப்புறம் ஒரு கதாபாத்திரமாகவே படத்தில் டிராவல் ஆனது. நடிப்பதில் எனக்கு பெரிதாக ஆர்வமில்லை. விருப்பமில்லாமல் வேலையில்லாத பட்டதாரி படத்தில் நடித்ததாக விக்னேஷ் சிவன் அந்த நேர்காணலில் ஓப்பனாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











