எனக்குனு யாரும் இல்ல.. நான் தனியாவே இருந்துட்டு போறேன்.. ஜெயம் ரவி ஓபன் டாக்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசிய விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவான ஜெயம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தை ரவியின் அண்ணான் ராஜா இயக்கியிருந்தார். அதன் பிறகு அவர் நடித்த படங்களும் தொடர்ந்து ஹிட்டாகின.

உச்சம் சென்ற ஜெயம் ரவி
ஜெயம் ரவி தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாக இருப்பவர். அதனால்தான் அவரது கேரியரில் பல வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவரது படங்களில் பல படங்கள் முக்கியமானதாக இருந்தாலும் பேராண்மை படம் அவைகளில் தனித்து தெரியும் ஒன்று. கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியான ஜனநாதன் இயக்கத்தில் உருவான அந்தப் படம்தான் ரவியை முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக அடையாளப்படுத்தியது.

தனி ஒருவன் ஜெயம் ரவி
அதேபோல் தனி ஒருவன் படம் ரவியின் கேரியரில் மிக மிக முக்கியமான படம். அதுவரை ஜெயம் ரவியை வைத்து ரீமேக் படங்களை மட்டுமே இயக்கிவந்த ராஜா முதல்முறையாக ரவிக்கென்று சொந்தமாக கதை எழுதினார். ஐபிஎஸ் அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த அந்தப் படம் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் ஆனது. அதிலிருந்து ராஜாவின் கேரியரும் உச்சம் சென்றது எனலாம்.

பொன்னியின் செல்வனில் கலக்கிய ரவி
இந்தச் சூழலில் யாருக்கும் அவ்வளவு எளிதாக கிடைக்காத வாய்ப்பு ஒன்று ஜெயம் ரவிக்கு கிடைத்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வனில் ரவி, அருண்மொழி சோழனாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இந்தக் கதாபாத்திரத்திற்கு ரவி செட் ஆவாரா என்று கேள்வி கேட்டவர்கள் அனைவரும் படத்தில் ரவியின் நடிப்பை பார்த்து வாயடைத்துப்போயினர்.

நான் தனியாவே இருந்துட்டு போறேன்
இந்நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்கு ஜெயம் ரவி பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், 'எம்ஜிஆர் - சிவாஜி, கமல் - ரஜினி, அஜித் - விஜய் என்பதுபோல் ஜெயம் ரவி என்ற பெயருக்கு போட்டியாக யார் பெயரை போட வேண்டும்' என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'எனக்கு நான்தான் போட்டியே. எனக்கு போட்டியென்று யாருமே இல்லை. நான் இப்படியே தனியாக இருந்துட்டு போயிட்றேன்' என கூலாக பதிலளித்தார்.

துறைமுகத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் அகிலன்
இவர் தற்போது அகிலன் படத்தில் நடித்திருக்கிறார். துறைமுகத்தை மையமாக வைத்துஅந்தப் படம் உருவாகியிருக்கிறது. பூலோகம் படத்தை இயக்கிய கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படமானது மார்ச் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











