8 வருடத்துக்கு பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் முன்னாள் ஹீரோயின்.. அம்மா கேரக்டருக்கும் ரெடியாமே!
சென்னை: பிரபல முன்னாள் ஹீரோயின் எட்டு வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தமிழில், பாய்ஸ், சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் உட்பட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ஜெனிலியா.
மும்பையை சேர்ந்த இவர், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ரிதேஷ் தேஷ்முக்
இந்தி நடிகரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு ஜெனிலியா நடிப்பதை நிறுத்தி விட்டார்.

திருமணத்துக்கு பிறகு
கடைசியாக இந்தியில் 2012 ஆம் ஆண்டு வெளியான, தேரே நால் லவ் ஹோ ஹயா என்ற படத்தில் நடித்திருந்தார். அவர் இப்போது அளித்துள்ள பேட்டியில் நடிப்பதற்கு மீண்டும் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்தேன். அதன்படி செயல்பட்டேன்.

முழுக் கவனமும்
பிறகு குழந்தைகளை கவனித்துக் கொண்டேன். வீட்டில் குழந்தைகள் என்ன செய்வார்களோ என்ற கவலைப்பட்டுக் கொண்டே ஷூட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது. அதனால் பட வாய்ப்புகளை ஏற்கவில்லை. நடிகை என்றால் என் முழுக் கவனத்தையும் அதில் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இப்போது குழந்தைகள் ஓரளவு வளர்ந்துவிட்டார்கள்.

அதிக வாய்ப்புகள்
அதனால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். இப்போது அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன. நான் பார்த்த டெல்லி கிரைம், ஆர்யா ஆகிய வெப்சீரிஸ்களில் பெண் நாயகிகளின் கேரக்டர் வலுவானதாகவும் அற்புதமாகவும் இருப்பதை உணர்ந்தேன். அது போன்ற கேரக்டர்கள் என்னை அதோடு இணைக்கின்றன.

மீண்டும் நடிப்பு
இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் மீண்டும் நடிக்க வருகிறேன் என்றால், அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். ரசித்து அனுபவிக்கும் கேரக்டராக இருக்க வேண்டும். அம்மாவாக நடிக்க மாட்டேன், என் வயது கேரக்டரில் நடிக்க மாட்டேன் என்கிற எண்ணமெல்லாம் இல்லை. இவ்வாறு ஜெனிலியா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











