twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நானாக போய் கமலிடம் பேசியதில்லை - விக்ரம் அனுபவம் குறித்து டெல்லி கணேஷ் மகன் மகா

    |

    சென்னை: நேற்று வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லன் கூட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார் நடிகர் டெல்லி கணேசின் மகன் மகாதேவன்.

    அழுத்தமான கதாப்பாத்திரம் இல்லை என்றாலும் கூட, நீண்ட முடியும், தாடியுமாக அடியாளுக்குப் பொருத்தமான கெட்டப்பில் சட்டென கவனிக்க வைக்கிறார்.

    இந்நிலையில், பேட்டி ஒன்றில் விக்ரம் படப்பிடிப்பின் போது கமலிடம் தானாகப் போய் பேசியதே இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

    தேசிய விருது நடிகை விரக்தி .. ஒல்லி இசையமைப்பாளர் மகிழ்ச்சி.. ஒரு வேல அதுவா இருக்குமோ?தேசிய விருது நடிகை விரக்தி .. ஒல்லி இசையமைப்பாளர் மகிழ்ச்சி.. ஒரு வேல அதுவா இருக்குமோ?

    கமல் மீது அவ்வளவு மரியாதை

    கமல் மீது அவ்வளவு மரியாதை

    கமலை சிறு வயது முதல் பார்த்து வருகின்றேன். நான் அவரின் தீவிரமான ரசிகன். கமலின் எல்லா படங்களிலும் அப்பா டெல்லி கணேஷ் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிப்பார். அதுவே எனக்கு அந்த சமயத்தில் மிகப் பெரிய பெருமையாக இருந்தது. இப்போது நான் அவரது படத்தில் நடிக்கிறேன் என்பது அதை விட இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு. படப்பிடிப்பில் கமல் தனது நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருப்பார். ஷாட் ரெடி என்று இயக்குநர் அழைத்தவுடன் தனக்கே உரிய ஸ்டைலில் நடந்து போவார். ஆனால் ஆக்சன் சொன்னவுடன் அப்படியே வேறு ஒரு ஆளாக மாறி நிற்பார். பார்த்து பிரம்மித்துப் போனேன். என்றாலும், நானாக அவரிடம் சென்று பேச எனக்கு ஒரு பயம். காரணம் அவரின் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறேன்.

    விஜய் சேதுபதியின் தம்பி

    விஜய் சேதுபதியின் தம்பி

    படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக வருவேன். விஜய் சேதுபதி எனது மைத்துனரின் நண்பர். அவர்கள் இருவரும் துபாயில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். சில வருடங்களுக்கு முன் எங்கள் வீட்டிற்கு வந்தார். அப்போது பேசியது. ஆனால் இப்போது அவருடன் படத்தில் நடிக்கும் போது, நேராக என்னிடம் வந்து நலம் விசாரித்தார். இத்தனைக்கும் நான் அப்படத்தில் நடிக்கும் போது எனது கெட்டப்பெல்லாம் வேறு மாதிரியாக வைத்திருந்தேன். சட்டென அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. என்றாலும் விஜய் சேதுபதி அவரே என்னை ஞாபகம் வைத்து என்னிடம் வந்து பேசினார்.

    ஓரத்துலயாவது நிக்க வையுங்க

    ஓரத்துலயாவது நிக்க வையுங்க

    கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என அறிந்தவுடன் நேராக அவரிடம் சென்று சார் இந்தப் படத்தில் என்னை ஓரத்துலயாவது நிக்க வையுங்க என்று கேட்டேன். அப்படி கிடைத்தது தான் இந்த வாய்ப்பு. லோகேஷ் ரொம்ப கூலான இயக்குநர். செட்டில் எந்த இடத்திலும் அவர் கோபப்பட்டு நான் பார்த்தது இல்லை. அந்த அளவிற்கு தனக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு வாங்குவார்.

    Recommended Video

    Vikram படத்தில் நடித்திருக்கும் 3 சின்னத்திரை பிரபலங்கள்,பாராட்டும் ரசிகர்கள் #Celebrity |
    டெல்லி கணேஷ் நெகிழ்ச்சி

    டெல்லி கணேஷ் நெகிழ்ச்சி

    ராஜ்கமல் பிலிம்சில் இருந்து தனக்கு கால் வந்த போது, தனது தந்தை டெல்லி கணேஷ் அருகில் தான் இருந்தார் என்றும், அப்போது நடிக்க வாய்ப்பு வந்திருப்பதை தான் கூறியதாகவும் மகா தெரிவித்திருக்கிறார். ஆனால் என்ன கேரக்டர் எனத் தெரியவில்லை என்று கூறியதும், "அதை பற்றியெல்லாம் எனக்கு கவலை இல்லை. ராஜபார்வை என்ற படத்தில் ராஜ்கமல் பிலிம்சில் நான் இணைந்தேன். இன்று என் பையன் இருக்கிறான் அது போதும் எனக்கு" என்று டெல்லி கணேஷ் நெகிழ்ச்சியுடன் கூறியதாக மகா தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

    English summary
    I have not directly speak with kamalhaasan, delhi ganesan son maha about Vikram Movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X