twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதிகாரத்தை பயன்படுத்தி மகனின் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கினாரா? முன்னாள் ஹீரோயின் விளக்கம்!

    By
    |

    பெங்களூரு: தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கிக் கொடுக்கவில்லை என்று முன்னாள் ஹீரோயினும் எம்.பியுமான சுமலதா கூறியுள்ளார்.

    தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்தவர் சுமலதா.

    நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி நான் கடவுள் இல்லை! S.A.சந்திரசேகருடன் முதல் முறையாக கைகோர்க்கும் சமுத்திரகனி

    இவர், கன்னடத்தில் நடித்தபோது நடிகர் அம்பரீஷை காதலித்து கடந்த 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

    மண்டியா தொகுதி

    மண்டியா தொகுதி

    தமிழில், திசைமாறிய பறவைகள், முரட்டுக்காளை, கழுகு, கரையெல்லாம் செண்பகப்பூ, ஒரு ஓடை நதியாகிறது உட்பட பல படங்களில் நடித்தவர் சுமலதா. இவருக்கு அபிஷேக் என்ற மகன் இருக்கிறார். அம்பரீஷ் மறைவுக்குப் பிறகு, அவருடைய மண்டியா தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார் சுமலதா.

    பேட் மேனர்ஸ்

    பேட் மேனர்ஸ்

    அவரை எதிர்த்து போட்டியிட்டது, கன்னட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி. சுமலதாவின் மகன் அபிஷேக், இப்போது பேட் மேனர்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவருக்கு இரண்டாவது படம். இந்தப் படத்தை கே.எம் சுதீர் தயாரிக்கிறார்.

    விவசாய அமைப்புகள்

    விவசாய அமைப்புகள்

    துனியா சூரி இயக்குகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங், கைவிடப்பட்ட சர்க்கரை ஆலையில் நடந்து வந்தது. இங்கு படப்பிடிப்புகளுக்கு இதற்கு முன், அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் சில விவசாய அமைப்புகள், இங்கு படப்பிடிப்பு நடத்த நடிகை சுமலதா தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளதாக புகார் கூறின.

    அடிப்படையற்ற புகார்

    அடிப்படையற்ற புகார்

    இந்நிலையில், இதற்கு விளக்கம் அளித்துள்ள சுமலதா, இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கு பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது தெரியாது. இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. எனக்கும் இதற்கும் சம்மந்தமில்லை.

    உள்ளூர் பொருளாதாரம்

    உள்ளூர் பொருளாதாரம்

    இதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. என் மீது புகார் தெரிவிப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இதுபோன்ற படப்பிடிப்புகளால், உள்ளூர் பொருளாதாரம். உள்ளூர் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார்.

    Read more about: sumalatha
    English summary
    Sumalatha Ambareesh says, I have not misused my power to get permission for my son's film shoot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X