'எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு'... மேடையில் உண்மையை சொன்ன விஜய் ஆண்டனி!

அர்ஜுன், விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Recommended Video

Kolaikaran Press Meet | Vijay Antony- இந்த படத்துல கெமிஸ்ட்ரி கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிருக்கேன்-வீடியோ

சென்னை: தனக்கு மனரீதியான பிரச்சினை இருப்பதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கொலைகாரன். க்ரைம் திரில்லர் படமான இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில் அர்ஜுன், விஜய் ஆண்டனி, இயக்குனர் சசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, தனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருப்பதாகக் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது,

இயக்குனர் ஆண்ட்ரு

இயக்குனர் ஆண்ட்ரு

"என்னுடைய நண்பர் ஆண்ட்ருவுடன் வேலை பார்த்தது சந்தோஷமான விஷயம். எதுக்குமே சமரசம் செய்துகொள்ளாத இயக்குனர் அவர். படத்தை சொன்ன தேதியில், சொன்ன பட்ஜெட்டில் முடித்துவிட்டார். அவர் மென்மேலும் உயர வேண்டும் என்பது தான் எனது விருப்பம்.

இசை பேசப்படும்

இந்த படத்தில் இசை பெரிதாக பேசப்படும். அந்த அளவுக்கு சிறப்பான பின்னணி இசையை அமைத்திருக்கிறார் சைமன் கே கிங். ஒளிப்பதிவாளர் முகேஷ் உள்பட எல்லோருமே சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள்.

எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு

எனக்கு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு

எனக்கு ஒரு சைகாலஜிக்கல் பிரச்சினை இருக்கு. நான் நடிக்கும் போது எதிரில் இருப்பவர் நன்றாக நடித்தால் எனக்கு நடிக்க வராது. அவரை நான் ரசிக்க ஆரம்பித்துவிடுவேன். நான் நல்ல ரசிகனாக இருப்பது தான் சினிமாவில் எனது வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

இளையராஜா இசை

இளையராஜா இசை

இளையராஜா இசையை ரசித்து தான் நான் இசையமைப்பாளர் ஆனேன். அதுபோல் தான் நல்ல நடிகர்களை பார்த்து, ரசித்து, இப்போது நடிகராகிவிட்டேன். ஆனால் நன்றாக நடிக்கிறேனா என எனக்கு தெரியவில்லை.

அர்ஜுன் நடிப்பு

அர்ஜுன் நடிப்பு

இந்த படத்தில் அர்ஜுன் நடிப்பை பார்த்து ரசித்தேன். சர்வதேச தரத்திலான நடிப்பை அவர் தந்திருக்கிறார். அவரை பார்த்து நடிக்க கற்றுக்கொண்டேனா என்பது தெரியவில்லை. ஆனால் அவரது நடிப்பை பார்த்து வியந்தேன். அர்ஜுன் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய படமாக மாறியது". இவ்வாறு அவர் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X