என் மகனுக்கு இணை யாரும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன்.. பாலாவால் காண்டான சுரேஷ் தாத்தா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜியால் சுரேஷ் சக்கரவர்த்தி நொந்து போயுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவர் சுரேஷ் சக்கரவர்த்தி. பிக்பாஸ் வீட்டிலேயே வயதில் மூத்தவராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி.

இளம் போட்டியாளர்கள் பலருக்கும டஃப் கொடுக்கும் வகையில் விளையாடி வந்தார். சுரேஷ் சக்கரவர்த்தி இருந்த வரை பிக்பாஸ் நிகழ்ச்சியும் படு சுவாரசியமாக இருந்தது.

கேபியை சுமந்து

கேபியை சுமந்து

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து மூன்றாவது போட்டியாளராக வெளியேறினார் சுரேஷ் சக்கரவர்த்தி. இளைஞர்களுக்கு சமமாக கேப்டன் டாஸ்க்கின் போது கேபியை தோளில் சுமந்து ஸ்கோர் செய்தார் சுரேஷ்.

அறிவில்லையா?

அறிவில்லையா?


பிக்பாஸ் வீட்டிலேயே பாலாஜியிடம் தான் நெருக்கமாக பழகி வந்தார். ஆனால் சனம் ஷெட்டியுடனான பிரச்சனையின் போது, பாலாஜி சுரேஷ் சக்கரவர்த்தியை அறிவில்லையா, வயசுக்கு ஏத்தா மாதிரி நடந்துக்க முடியாதா என கேட்டு சரமாரியாக பேசினார்.

தனது மகனை போல்

தனது மகனை போல்

இதனால் ரொம்பவே உடைந்து போனார் சுரேஷ் சக்கரவர்த்தி. அதன்பிறகு பாலாஜியிடம் அதிகம் பேசாமல் இருந்து வந்தார். ஒரு முறை டாஸ்க்கின் போது தனது மகன் குறித்து பேசி எமோஷனல் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜியை பார்க்க தனது மகனை பார்ப்பது போன்று இருப்பதாக கூறி கண்ணீர்விட்டார்.

அடிக்க பாய்ந்தார்

அடிக்க பாய்ந்தார்

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பாலாஜி ஆரியிடம் படு மோசமாக நடந்து வருகிறார். வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் அவன் இவன் என பேசி, அடிக்கவும் பாய்ந்தார் பாலாஜி. இதனால் கடுப்பான ரசிகர்கள் பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனார்.

ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள்

ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள்

பாலாஜியால் நிகழ்ச்சியின் தரமே குறைந்து விட்டது என்றும் பார்வையாளர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு குழந்தைகள் பார்க்க தகுதியற்ற நிகழ்ச்சியாக மாறிவிட்டது என விளாசி வருகின்றனர். பாலாஜி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை அந்த நிகழ்ச்சிக்கு ஏ சர்ட்டிஃபிகேட் கொடுங்கள் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

பிரபலங்கள் வருகை

பிரபலங்கள் வருகை

இந்நிலையில் இந்த சீசனில் எவிக்ட் ஆனவர்கள் மற்றும் ஏற்கனவே முடிந்த மூன்று சீசனில் உள்ள ஒரு சிலர் ஃபினாலே வாரத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வார்கள் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதனை அறிந்த நெட்டிசன் ஒருவர், சுரேஷ் சக்கரவர்த்தியிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சனம் பவரை சொல்லுங்கள்

சனம் பவரை சொல்லுங்கள்

அதாவது, சுரேஷ் தாத்தா உங்களிடம் உரிமையாக நான் ஒன்று சொல்கிறேன். பிக்பாஸ் வீட்டிற்கு நீங்கள் மீண்டும் செல்லப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியும். அங்கு போய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சனம்ஷெட்டியின் பவர் என்னவென்று மற்ற போட்டியாளர்களுக்கு சொல்லுங்கள்.

அறிவுரை கூறுங்கள்

அறிவுரை கூறுங்கள்

அதேபோல் பாலாவை உங்கள் பையனாக பார்த்தேன் என்று சொன்னீர்கள். உள்ளே போய் உங்கள் பையனுக்கு அறிவுரை கூறுங்கள். அவர் செய்கிற தவறுகளை எடுத்து சொல்லுங்கள்' என்று கூறியுள்ளார்.

ஈடு இணை இல்லை

ஈடு இணை இல்லை

அதற்கு பதில் கூறியுள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, என்னுடைய சொந்த மகனுக்கு ஈடு இணை யாரும் இல்லை என்று கூறியுள்ளார். இதன் மூலம் சுரேஷ் சக்கரவர்த்தி பாலாஜி மீது செம காண்டில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றால் பாலாஜிக்கு அட்வைஸ் செய்வாரா என்று எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X