twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் சேதுபதி காலில் குத்தியிருந்த சோடா பாட்டிலை நீக்கிவிட்டேன்... சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்

    |

    சென்னை: இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படமாக வெளிவந்த மாமனிதன் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    இயக்குநர்கள் பாரதிராஜா, சங்கர் உள்ளிட்ட பலர் அந்தப் படத்தை பாராட்டி எழுதியிருந்தனர். குறிப்பாக விஜய் சேதுபதி தேசிய விருதிற்கு தகுதியானவர் என்று சங்கர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் ஒரு தனியார் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில், தர்மதுரை படம் உருவான விதம் பற்றி கூறியுள்ளார்.

    லவ் பண்ணுறேன்; ஆனா,பொண்ணு யாருன்னு கேட்காதீங்க...சஸ்பென்ஸ் வைக்கும் விஷால் லவ் பண்ணுறேன்; ஆனா,பொண்ணு யாருன்னு கேட்காதீங்க...சஸ்பென்ஸ் வைக்கும் விஷால்

    தர்மதுரை

    தர்மதுரை

    அவர்கள் கூட்டணியில் உருவான "இடம் பொருள் ஏவல்" திரைப்படம் ரிலீஸ் ஆகாத நிலையில் தர்மதுரை திரைப்படத்தை அறிவித்தனர். இசைஞானி இளையராஜாவிற்கும் வைரமுத்துவிற்கும் கருத்து வேறுபாடு இருக்கும் நிலையில், இடம் பொருள் ஏவல் திரைப்படம் மூலம் முதன் முதலாக யுவனுடன் கூட்டணி அமைத்தார் வைரமுத்து. ஆனால் அவர்கள் கூட்டணியில் வெளியான முதல் படம் என்கிற அந்தஸ்தை தர்மதுரைதான் பெற்றது. வைரமுத்துவிற்கு மீண்டும் ஒரு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது

    RK சுரேஷ் - விஜய் சேதுபதி மோதல்

    RK சுரேஷ் - விஜய் சேதுபதி மோதல்

    கடந்த 2012-ஆம் ஆண்டு RK சுரேஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில் வசந்தகுமரன் என்கிற படத்தை அறிவித்திருந்தனர். ஆனால், திடீரென தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கச் சென்றதால் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. காரணம் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்பட காலக்கட்டதில் இருந்தே RK சுரேஷ் விஜய் சேதுபதிக்காக காத்திருந்தாராம். திடீரென்று கால் ஷீட் கொடுக்காமல், தனக்குப் பிறகு வந்த தனுஷிற்கு கொடுத்ததால் விஜய் சேதுபதியை தாக்கி பேட்டிகள் கொடுத்திருந்தார்.

    இருவரும் சமாதானம்

    இருவரும் சமாதானம்

    பிரச்சனை நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கங்கள் வரை சென்றும் விஜய் சேதுபதி சமாதானம் ஆகவில்லை. காரணம் சுரேஷ் தன்னை பேசக் கூடாத வார்த்தைகளால் பேசிவிட்டார். அதனால் அவருடன் சேர்ந்து படம் பண்ண மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். பின்னர் RK சுரேஷின் தொடர் முயற்சிகளால், விஜய் சேதுபதி சமாதானம் ஆகி நடிக்க ஒத்துக் கொண்டார். இம்முறை வசந்த குமரன் படத்துக்கு பதிலாக வேறொரு படத்தை எடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.

    Recommended Video

    Thalapathy வேற Level | Vijay பெயரில் இரத்ததான Mobile App *kollywood | Filmibeat Tamil
    சீனு ராமசாமி வருகை

    சீனு ராமசாமி வருகை

    அந்தச் சூழ்நிலையில்தான் சீனு ராமசாமிக்கு அந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது. தர்மதுரை கதையை சொன்னவுடன் சுரேஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிடித்து போய் உடனே பட வேலைகளை துவங்கிவிட்டனர். அந்தப் படம் மூலம் மீண்டும் விஜய் சேதுபதியை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, சேது காலில் குத்தியிருந்த சோடா பாட்டிலை அகற்ற வாய்ப்பு கிடைத்தது, RK சுரேஷிற்கு நன்மை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது என சீனு ராமசாமி கூறியுள்ளார்.

    English summary
    I have removed the Soda Bottle pinned in Vijay Sethupathi’s Feet says Seenu Ramasamy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X