சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நானும் கெட்டு போயிட்டேன்... நடிகர் சத்யராஜ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடினமான முயற்சியால் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மாறியுள்ளார்

டாக்டர் கொடுத்த மிக பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து இப்பொழுது அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார்

இந்த நிலையில் பட விழா ஒன்றில் பேசிய சத்யராஜ் சிவகார்த்திகேயன் கூட சேர்ந்து நானும் கெட்டு போயிட்டேன் என கலகலப்பாக பேசியுள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

நடிகர் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது அதனாலேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவை ஆரம்பத்திலிருந்தே கொடுத்து வருகின்றனர். 3, மெரினா, மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த திருப்புமுனையை ஏற்படுத்தியது.

திருப்புமுனையை ஏற்படுத்தியது

திருப்புமுனையை ஏற்படுத்தியது

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சூரி-யின் அட்டகாசமான காம்போவில் வெளியான வருத்தப்படாத வாலிபர்சங்கம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது. ஸ்ரீதிவ்யா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்து இருப்பார்கள். அதன் பிறகு சிவகார்த்திகேயனுக்கு வெளியான எதிர்நீச்சல்,மான் கராத்தே, காக்கிச்சட்டை, ரஜினிமுருகன்,ரெமோ, வேலைக்காரன், சீமராஜா என அடுத்தடுத்து ஹிட் படங்களாக அமைந்தது

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக சிவகார்த்திகேயன் படங்களும் வசூலை குவித்து வரும் நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக சிவகார்த்திகேயன் உயர்ந்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்துள்ளார் இப்படம் அனைத்து பணிகளும் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. அடுத்ததாக இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் மற்றும் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 20 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Recommended Video

இந்த படத்துக்கு DON-னு ஏன் பேர் வச்சாங்க தெரியுமா Sivakarthikeyan Super Speech at Don press Meet
நானும் கெட்டு போயிட்டேன்

நானும் கெட்டு போயிட்டேன்

இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட விழாவில் சத்யராஜ் சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எப்பொழுதும் நக்கலாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள சத்யராஜ் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் உடன் சேர்ந்து நானும் கெட்டு போயிட்டேன் என கலகலப்பாக பேசியுள்ளது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X