twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யை விட ஒரு படி மேலே அஜித்துக்கு பண்ணனும்னு நெனச்சேன்!

    |

    சென்னை : ஊர்களின் பெயர்களில் படங்களின் டைட்டிலை வைப்பதில் பிரபலமானவர் இயக்குனர் பேரரசு

    நடிகர் விஜய்க்கு அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்தவர்

    விஜய்க்கு கொடுத்ததை விடவும் அஜித்துக்கு ஒருபடி மேலே பண்ணணும்னு நினைச்சேன் என பேரரசு கூறியுள்ளார்.

    அடப்பாவிங்களா...முழுசா 3 ஷோ கூட முடியல...பீஸ்ட் முழு படமும் இணையத்தில் வந்துடுச்சே அடப்பாவிங்களா...முழுசா 3 ஷோ கூட முடியல...பீஸ்ட் முழு படமும் இணையத்தில் வந்துடுச்சே

    ஊர்களின் பெயர்களை தலைப்புகளாக

    ஊர்களின் பெயர்களை தலைப்புகளாக

    தமிழ் சினிமாவில் மிகவும் தனித்துவமான இயக்குனராக உள்ளவர் இயக்குனர் பேரரசு. மற்ற இயக்குனர்களிடம் இருந்து சற்று வித்தியாசமாக யோசிக்கும் இவர் தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஊர்களின் பெயர்களை தலைப்புகளாக வைத்து வருகிறார்.

    அந்த வகையில் 2005 ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பேரரசுக்கு இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

    அண்ணன்-தங்கை பாசத்தை

    அண்ணன்-தங்கை பாசத்தை

    கிராமத்து கதையில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்தது மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் திரிஷா காம்போ மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது. அண்ணன் தங்கை பாசம், ஆக்ஷன், காதல்,காமெடி என அனைத்தும் கலந்த பக்கா கமர்ஷியல் திரைப்படமாக வெளியான திருப்பாச்சி பிரம்மாண்ட வெற்றியை பெற்றுத் தந்தது

    மீண்டும் கூட்டணி

    மீண்டும் கூட்டணி

    திருப்பாச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜய்யுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சிவகாசி என்ற படத்தை இயக்கினார். இந்த முறை முழுக்க சிட்டி பேசில் எடுக்கப்பட்ட சிவகாசி படமும் மாபெரும் வெற்றி பெற்றது. பொதுவாக பேரரசு இயக்கும் அனைத்து படங்களிலும் பாடல்களை தானே எழுதி வருகிறார். திருப்பாச்சி மற்றும் சிவகாசி உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதி உள்ளார். குறிப்பாக விஜய்க்கு பாடலை பேரரசே எழுதியுள்ளார் திருப்பாச்சி மற்றும் சிவகாசி என இரண்டு படங்களிலும் விஜய்க்கு வைக்கப்பட்ட இன்ட்ரோ பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியது.

    திருப்பதி

    திருப்பதி

    அடுத்ததாக அஜித்துடன் கூட்டணி அமைத்தார். திருப்பதி என்ற பெயரில் உருவான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சதா நடித்திருப்பார். பேரரசுவின் முந்தைய படங்களைப் போலவே இந்தப் படமும் குடும்ப சென்டிமென்ட்,காதல், காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக வெளியானது. பாடல்களை பேரரசு எழுதியிருந்தார்

    இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் திருப்பாச்சி மற்றும் சிவகாசி உள்ளிட்ட படங்களில் விஜய்க்கு தான் எழுதிய பாடல்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் அடுத்ததாக அஜித்துக்கு திருப்பதி படத்தில் எழுதும்போது எனக்கு பயமாக இருந்தது மிகப்பெரிய பொறுப்பும் இருந்தது. அதனால் திருப்பதி படத்திற்கு பாடல்களை எழுத மிகவும் பயந்தேன்.

    ஒருபடி மேலே இருக்க வேண்டும்

    ஒருபடி மேலே இருக்க வேண்டும்

    அஜித்திற்கு ஏற்ற மாஸான டைட்டில் சாங் இருக்க வேண்டும் என திருப்பதி படத்தின் இன்ட்ரோ சாங் எழுதும்பொழுது பயந்து பயந்து எழுதினேன். விஜய்க்கு பாடல்களை எழுதியதை விடவும் அஜித்துக்கு ஒருபடி மேலே இருக்க வேண்டும் என்று எழுதிய திருப்பதி வந்தா திருப்பம் பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றது பாடல் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. என திருப்பதி படத்தில் அஜித்துக்கு எழுதிய இன்ட்ரோ பாடல் குறித்து பேரரசு பகிர்ந்துள்ளார்.

    English summary
    I thought of having mass intro song for ajith than vijay says perarasu
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X