எனக்கு 3 பிரச்சனை இருக்கு: உண்மையை சொன்ன பிரபாஸ்

By Siva

ஹைதராபாத்: எனக்கு 3 பிரச்சனை உள்ளது. அப்படி இருக்கும் போது நான் ஏன் இந்த துறையில் உள்ளேன் என்று யோசிப்பது உண்டு என பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் நடித்துள்ள சாஹோ மெகா பட்ஜெட் படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தில் அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷ்ராஃப், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபாஸ் பேட்டி ஒன்றில் தன்னை பற்றியும், திரையுலகம் பற்றியும் பேசியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது,

சினிமா

சினிமா

எனக்கு சோம்பல் உள்ளது. நான் கூச்ச சுபாவம் உள்ளவன், மக்களை சந்தித்து பேச முடியாது. எனக்கு இந்த 3 பிரச்சனைகள் இருப்பதால் நான் ஏன் இந்த துறைக்கு வந்தேன். இது சரியா, தவறா என்று சில சமயம் என்னை நானே கேட்டுக் கொள்வது உண்டு. அதிர்ஷ்டவசமாக பாகுபலி படம் உருவானது. தற்போது எனக்கு இந்த துறையில் இருப்பதை தவிர வேறு வழியில்லை.

அசவுகரியம்

அசவுகரியம்

நான் கூச்ச சுபாவம் உள்ளவனாக இருக்க விரும்பவில்லை. ஏனென்றால் சில சமயங்களில் அது அசவுகரியமாக உள்ளது. அந்த சுபாவத்தால் புதியவர்களை சந்திக்க நேரம் எடுக்கிறது. கூட்டத்தை பார்த்தால் அசவுகரியப்படாமல் இருக்க விரும்புகிறேன் ஆனால் முடியவில்லை.

கேமரா

கேமரா

கூச்ச சுபாவத்தால் என் நடிப்புத் திறன் பாதிக்கப்படவில்லை. என் முதல் படத்தில் இருந்தே நான் கேமராவுக்கு முன்பு சவுகரியமாக உணர்கிறேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நிறைய பேர் இருந்தால் எனக்கு அசவுகரியமாகிவிடும். பல டேக்குகள் போனாலும் நான் கவலைப்படுவேன் என்று பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

சாஹோ

சாஹோ

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள சாஹோ படம் தெலுங்கு, தமிழ், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க பிரபாஸ் ரூ. 100 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஷ்ரத்தா கபூருக்கு ரூ. 7 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X