படத்தில் மட்டும் இல்லை ஸ்பாட்லயும் சமுத்திரக்கனி அண்ணனை சாவடிச்சிட்டேன் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படத்தை இயக்குநர் சிபிசக்கரவர்த்தி இயக்கி இருப்பார்

இயக்குநர் அட்லி இடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி டான் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் டான் படத்தில் மட்டுமல்லாமல் ஸ்பாட்லயும் சமுத்திரக்கனி அண்ணாவை சாவடிச்சிட்டேன் என சிபி சக்கரவர்த்தி சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில்

டாக்டர் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வந்த டான் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது தொடர்ந்து முன்னணி இயக்குநர் உடன் இணைந்து பணியாற்றி வந்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இணைந்தார். இயக்குநர் அட்லீ இடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி டான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர்

டான்

டான்

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஏற்கனவே டாக்டர் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். அதில் அவர்களது கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்க டான் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் அதையும் தாண்டி அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே உள்ள ஆழமான உறவை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் மிகவும் அழுத்தமாக கூறியிருந்தது இப்படத்தின் வெற்றிக்கு மற்றுமொரு முக்கிய பங்காக அமைந்தது

100 கோடியை தாண்டி வசூல் சாதனை

100 கோடியை தாண்டி வசூல் சாதனை

முதல் படம் என்ற எந்த ஒரு சாயலும் இல்லாத அளவிற்கு மிக நேர்த்தியாக சிபிசக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியிருந்தார். சிவகார்த்திகேயன், பிரியங்காவின் மோகன்,சமுத்திரகனி, சூரி,எஸ் ஜே சூரியா, முனீஸ்காந்த், ஆர்ஜே விஜய், சிவாங்கி, பாலசரவணன், காளி வெங்கட் சூரி என பலர் நடித்திருந்த அந்த திரைப்படம் 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்தது.

ஸ்பாட்டிலும் சமுத்திரக்கனி அண்ணாவை சாவடிச்சிட்டேன்

ஸ்பாட்டிலும் சமுத்திரக்கனி அண்ணாவை சாவடிச்சிட்டேன்

சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மிகவும் கம்பீரமாக சமுத்திரக்கனி அப்படியே நடித்திருப்பார். இறுதியில் அனைவரையும் கண்கலங்க வைத்த சமுத்திரகனி தனி பாராட்டுக்களைப் பெற்றார். இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் சமுத்திரக்கனி குறித்து பேசிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியுள்ளார் . அதில் படத்தில் மட்டும் இல்லாமல் ஸ்பாட்டிலும் சமுத்திரக்கனி அண்ணாவை சாவடிச்சிட்டேன்.

இந்தப்படம் என்ன ஏதோ ஒன்னு பண்ணுதுடா

இந்தப்படம் என்ன ஏதோ ஒன்னு பண்ணுதுடா

சில காட்சியெல்லாம் 15 டேக்கு தாண்டி போனது எதற்கும் கொஞ்சம் கூட சலிக்காமல் சமுத்திரக்கனி கேட்டுக் கேட்டு வித்தியாச வித்தியாசமான நடிப்பை கொடுத்தது மறக்க முடியாதது அதேசமயம் படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை என்னை தொடர்ந்து மோட்டிவேட் செய்துகொண்டே இருந்தார் சமுத்திரக்கனி. இந்தப்படம் என்ன ஏதோ ஒன்னு பண்ணுதுடா என அடிக்கடி என்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பார் என சமுத்திரக்கனி குறித்து சிபி சக்கரவர்த்தி நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X