12 வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.. மனம் திறந்த மாரி செல்வராஜ்!

சென்னை : இயக்கிய சில திரைப்படங்களிலேயே ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் மாரிசெல்வராஜ்

பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது

இப்போது துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் 12 வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்த நினைவுகளை மனம் திறந்து பகிர்ந்துள்ளார்

சமூகத்தில் உள்ள தீண்டாமைகளை

சமூகத்தில் உள்ள தீண்டாமைகளை

எதார்த்தமான கதைகளை எடுத்துக் கொண்டு அதை அதன் தனித்தன்மையை மாறாமல் அதே சமயம் சமூக அக்கறையுடனும் படங்களை எடுப்பதில் மாரி செல்வராஜ் தனி இடத்தைப் பிடித்துள்ளார். இயக்கிய ஒரு சில படங்களியே ரசிகர்களின் ஃபேவரைட் இயக்குனராக மாறியுள்ளார் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். கயல் ஆனந்தி மற்றும் கதிர் இணைந்து நடித்த படம் சாதிய பாகுபாடுகளை இன்றளவும் சமூகத்தில் உள்ள தீண்டாமைகளைப் பற்றியும் மிக அழுத்தமாகப் பேசி இருந்தது.

இப்படியும் எடுக்கலாமா

இப்படியும் எடுக்கலாமா

யார் மனதையும் காயப்படுத்தாமல் இன்றும் தீண்டாமை எவ்வாறெல்லாம் இருக்கிறது என்பதை உணரவைத்த பரியேறும் பெருமாள் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றது ஒரு சாதி குறித்த திரைப்படத்தை இப்படியும் எடுக்கலாமா என மாரி செல்வராஜ் முதல் படத்திலேயே மிகவும் அழுத்தமாக பேசியிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் பரியேறும் பெருமாள் சர்வதேச அளவில் பல விருதுகளை குவித்து வருகிறது. இந்த படத்தை பா ரஞ்சித்தின் நீலம் புரோடக்சன் தயாரித்திருந்தது

உண்மை சம்பவங்களை

உண்மை சம்பவங்களை

பரியேறும் பெருமாள் கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கினார். தமிழ் நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான திரைப்படங்களிலேயே மிக வித்தியாசமான படமாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது . ஆக்ஷன் கதைகளில் நடித்து வந்த தனுஷ் மிகவும் யதார்த்தமான கதாபாத்திரத்தில் உண்மை சம்பவங்களை உள்வாங்கி நடித்திருந்தது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

கபடி வீரரை குறித்த

கபடி வீரரை குறித்த

மாரி செல்வராஜ் இயக்கிய முதல் இரண்டு படங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெற்ற நிலையில் அடுத்த படத்தை ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளது. அதனால் மீண்டும் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு பிரபல கபடி வீரரை குறித்த கதையை மாரி செல்வராஜ் இப்பொழுது இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து வர படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

12 ஆண்டுகள் உதவி இயக்குனராக

12 ஆண்டுகள் உதவி இயக்குனராக

இவ்வாறு இயக்கிய சில படங்களிலேயே தனித்துவமான இயக்குனர் என்ற பெயரை எடுத்த மாரி செல்வராஜ் 12 ஆண்டுகள் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இயக்குனர் ராமுடன் தொடர்ந்து பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரி செல்வராஜ் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தும் உள்ளார். ராம் -க்கு பிறகு பா ரஞ்சித் எனக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தவர். இயக்குனராக அறிமுகப்படுத்தியவர் என மனம் திறந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X