1945 படத்தில நடிச்ச எனக்கு சம்பளமே தரலைங்க - புகார் சொன்ன ராணா டகுபதி
சென்னை: 1945 படத்தில நடிச்ச எனக்கு சம்பளமே தரலைங்க என்று படத்தின் ஹீரோ தயாரிப்பாளர் மீது புகார் கூறியுள்ளார். நடிகர் ராணா டகுபதி நடிக்கும் 1945 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், வரும் ஜனவரியில் இப்படம் வெளியாகும் என்று இப்படத்தின் பிஆர்ஓ அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து ஹீரோ ராணா டகுபதி தனக்கு இன்னும் முழுமையாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், இது முற்றிலும் ஏமாற்று வேலை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ராணா டகுபதி தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். விஷுவல் எஃபெக்ட்ஸ் மேற்பார்வை, தயாரிப்பு, பட விநியோகம் செய்வது, தொகுப்பாளர் என பல பரிமாணங்களை கடந்து வந்துள்ளார். இவர் பாகுபலியின் இரண்டு படங்களுக்கு பிறகு, மிக பெரிய ஆக்சன் ஹீரோவானார்.

அதற்கு பிறகு தமிழில் கூட, பெங்களூர் நாட்கள் படத்தில் நடித்திருந்தார். தற்போது கூட ராணா ஹவுஸ்ஃபுல் 4 என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது ராணா தமிழில் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் கதையில் நடித்துள்ளார். 1945 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் கடந்த மூன்று வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. படத்தை தயாரித்துள்ளார் கழுகு படத்தை தயாரித்த எஸ்.என்.ராஜ ராஜன். படத்தை இயக்கி வருகிறார் சிவக்குமார். படத்தின் இயக்குனர் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு தான் மூன்று வருடமாக எடுத்து வந்த படம் தற்போது வெளியாக போகிறது என்று மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.
நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதறக்கு முன்பே, 1945 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸாக போவதாக சினிமாவில் மக்கள் தொடர்பு பணி செய்யும் ரமேஷ் பாலா ட்விட்டரில் ஒரு போஸ்டருடன் இச்செய்தியை கூறினார்.
அதற்கு ட்விட்டரிலேயே ராணா இது தனது முடிக்கப்படாத படம் என்றும் படத்தின் தயாரிப்பாளர் தனக்கு சம்பளத்தை முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும், படத்தின் தயாரிப்பாளரை நான் சந்தித்தே ஒரு வருடம் ஆகிறது என்றும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார் .மேலும் இது ஒரு ஏமாற்று வேலை என்றும் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.
இதை பற்றி வேறு எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொடுக்கப்படாத நிலையில், படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. இதில் என்ன நடக்கப்போகிறது, எப்படி இந்த பிரச்சினை தீர்க்கப்படப் போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்போம்.


Click it and Unblock the Notifications











