»   »  ஒரு காதலரை கூட கழற்றிவிடும் பாக்கியம் கிடைக்கலயே: நடிகை கவலை

ஒரு காதலரை கூட கழற்றிவிடும் பாக்கியம் கிடைக்கலயே: நடிகை கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil
எல்லாரும் என்ன கழற்றி விட்டுட்டாங்க - கங்கனா- வீடியோ

மும்பை: எந்த காதலரையும் கழற்றிவிடும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லை என்று கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பெயர் அவ்வப்போது யாருடனாவது அடிபடும். அதில் நடிகர் ரித்திக் ரோஷனை காதலித்ததாக அவர் கூறியது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருவரும் மோதிக் கொண்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கனா கூறியதாவது,

கேள்வி

கேள்வி

என் வாழ்க்கை பற்றி உனக்கு எப்படி அனைத்தும் தெரியும் என்று என் காதலர் கேட்டார். அது பிளாக் மேஜிக். என் வாழ்வில் பல காதல்கள் வந்து போயுள்ளன.

காதல்

காதல்

காதல் தோல்வி ஏற்படும் ஒவ்வொரு முறையும் இத்துடன் காதல் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்பேன். என்னை பொறுத்தவரை காதல் என்பது உடம்பு தொடர்பானது இல்லை.

கவலை

கவலை

ஒவ்வொரு முறையும் அவர்கள் தான் என்னை கழற்றிவிடுகிறார்கள். யாரையும் கழற்றிவிடும் பாக்கியம் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. 16 வயது முதல் 31 வயது வரை நான் ஒருவரை கூட கழற்றிவிடவில்லை.

 ஆச்சரியம்

ஆச்சரியம்

என்னை கழற்றிவிட்டவர்களின் பெயர்களை கூறினால் இவன் எல்லாம் உன்னை விட்டுட்டுப் போயிருக்கிறானா என்று ஆச்சரியப்படுவீர்கள். விட்டுச் சென்றவர்கள் திரும்பி வந்தபோது நான் ஏற்கவில்லை என்றார் கங்கனா.

English summary
Bollywood actress Kangana Ranaut said that she doesn't get the privilege of dumping someone in relationship. She added that she gets dumped every time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X