மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தைத் தருவீர்கள் என நம்புகிறேன்.. ஸ்டாலினுக்கு பாரதிராஜா வாழ்த்து!

சென்னை: தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ள முக ஸ்டாலின் மக்கள் எதிர்பார்த்த பெரிய மாற்றத்தை தருவார் என நம்புவதாக இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைக்கவுள்ளது.

பாரதிராஜா வாழ்த்து

பாரதிராஜா வாழ்த்து

முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் பாரதிராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது,

முதல்வர் வேட்பாளர்

முதல்வர் வேட்பாளர்

"ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து ஓட்டளித்த அனைத்து தமிழக மக்களுக்கும் நன்றிகள் பகிரும் வேளையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அரசுக்கும், முதல்வர் வேட்பாளராக வெற்றி பெற்றிருக்கும் நண்பர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தந்தையின் வழியில்

தந்தையின் வழியில்

சென்னை மாநகர மேயராகப் பணியாற்றிய போது மிகச் சிறந்த நிர்வாகியைக் கண்டிருக்கிறோம். அதேபோல் புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் நிர்வாகத்தை தங்களின் தலைமையில் அமைய உள்ள அரசிடமிருந்து எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். தந்தையின் வழியில் தமிழின் மேன்மைகளைப் பாதுகாத்து, தமிழக உரிமைகளை மீட்டெடுத்து, தமிழையும் தமிழர்களையும் காக்க வேண்டிய பொறுப்பை முதன்மையானதாக எடுத்துக் கொள்ள தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

சவாலான நாட்கள்

சவாலான நாட்கள்

திரைத்துறை சார்ந்த நலங்களை இன்னும் சிறப்பாக்குவீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பெரிய ஒரு மாற்றத்தைத் தருவீர்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. கொரானா காலகட்டம். மிகவும் சவாலான நாட்கள் தங்கள் முன் நிற்கிறது. பொருளாதாரப் பிரச்சனைகளைச் சரிசெய்து மக்களைப் பாதுகாக்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்களை எதிர் நோக்கி நிற்கிறோம்.

நல்லாட்சியை எதிர்பார்த்து

நல்லாட்சியை எதிர்பார்த்து

உங்கள் வெற்றி பல நல்லவற்றைத் தமிழகத்திற்குக் கொண்டு வரட்டும். மக்களின் பக்கம் நின்று பார்க்கும் தன்மை உங்களுக்கு அதிகம் உண்டு என்பதால் நல்லாட்சியை எதிர்பார்த்து மனம் நிறை மகிழ்வுடன் எனது வாழ்த்துகளைத் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X