ஸ்ரீ ரெட்டி பவர் ஸ்டாரை பார்த்து 'அந்த' வார்த்தை சொல்ல யார் காரணம் தெரியுமா?
Recommended Video

ஹைதராபாத்: ராம் கோபால் வர்மா கூறித் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி பவன் கல்யாணை 'எம்' வார்த்தை சொல்லி திட்டினாராம்.
தெலுங்கு திரையுலகில் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இந்நிலையில் அவர் நடிகர் பவன் கல்யாணை 'எம்' வார்த்தையால் திட்டினார்.

மேலும் பவன் கல்யாணை பார்த்து நடுவிரலை காட்டினார். இயக்குனர் ராம் கோபால் வர்மா சொல்லித் தான் ஸ்ரீ ரெட்டி அந்த கெட்ட வார்த்தையை பேசினாராம்.
இந்நிலையில் இது குறித்து ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது,
பவன் கல்யாணை 'எம்' வார்த்தையால் திட்டுமாறு ஸ்ரீ ரெட்டியிடம் கூறியது நான் தான். அர்ஜுன் ரெட்டி ஸ்டைலில் ஸ்ரீ ரெட்டி பவன் கல்யாணை திட்டினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.
நான் கூறியதை கேட்டு ஸ்ரீ ரெட்டியும் அப்படியே பேசிவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ரெட்டி அந்த வார்த்தையை சொன்னதால் பவன் கல்யாண் ரசிகர்கள் அவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











