»   »  பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை

பிரபாஸை பார்த்து செத்துட்டேன்: இப்படியும் ட்வீட்டிய பேட்மிண்டன் வீராங்கனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி 2 படத்தை பார்த்த பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டா ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


ரூ. 1,500 கோடி வசூல் செய்த முதல் இந்திய படம் பாகுபலி 2.


ஜுவாலா கட்டா

பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா பாகுபலி 2 படம் பார்த்துவிட்டு தனது கருத்துகளை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவருக்கு படம் மிகவும் பிடித்துள்ளது.


ரம்யா

பாகுபலி 2 படத்தை பார்த்தவர்கள் ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை பார்த்து சிவகாமி கதாபாத்திரத்தில் இவரை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்றனர். என்ன ஒரு பெர்பாமென்ஸ் என்று ரம்யா நடிப்பை பாராட்டியுள்ளார் ஜுவாலா.


பிரபாஸ்

பாகுபலியாக நடித்த பிரபாஸை பார்த்து செத்துட்டேன் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார் ஜுவாலா. பாகுபலியை பார்த்துவிட்டு பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர்.


ஜுவாலா

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸிடம் 6 ஆயிரம் பெண்கள் தங்கள் காதலை வெளிப்படுத்தினர். இந்நிலையில் படத்தை பார்த்த ஜுவாலா பிரபாஸுக்கு அன்பை தெரிவித்துள்ளார்.


English summary
Badminton player Jwala Gutta is impressed by SS Rajamouli's magnum opus Baahubali 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil