twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்படத்தில் நான் நடிக்கவே இல்லை.. சாமந்தியாக வாழ்ந்திருக்கிறேன்.. 'மிக மிக அவசரம்' ஸ்ரீ பிரியங்கா!

    |

    சென்னை: மிக மிக அவசரம் படத்தில் தான் நடிக்கவே இல்லை என நடிகை ஸ்ரீ பிரியங்கா தெரிவித்துள்ளார்.

    வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக 'அமைதிப்படை-2′, 'கங்காரு' என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்' படத்தின் மூலம் இயக்குநராகவும் அடியெடுத்து வைத்துள்ளார்.

    கங்காரு, வந்தா மல, கோடை மழை படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த கதாநாயகி ஸ்ரீபிரியங்கா இந்தப் படத்தில் பெண் காவலர் கதாபாத்திரத்திலும், நாயகனாக அரீஷ்குமார் முக்கிய தோற்றத்திலும் நடித்துள்ளார். இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

    இதுவரையில் நடித்துள்ள கனமான கதாபாத்திரங்களில் அவரது நடிப்பை பார்த்து இந்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்பதாலேயே 'மிக மிக அவசரம்' படத்தில் சாமந்தி என்கிற இந்த போலீஸ் கான்ஸ்டபிள் கதாபாத்திரம் தனக்கு கிடைத்தது என்கிறார் ஸ்ரீபிரியங்கா.

    வரும் அக்-11ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்டார் ஸ்ரீபிரியங்கா..

    கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்கொடுத்த வாக்கை காப்பாற்றிய ரஜினி.. கலைஞானத்திற்கு வீடு வாங்கி கொடுத்து குத்துவிளக்கும் ஏற்றிவிட்டார்

    பெண்களுக்கான செய்தி

    பெண்களுக்கான செய்தி

    "போலீஸ் கதாபாத்திரம் என்பதால் மட்டுமல்ல, அதன்மூலம் பெண்களுக்கு ஒரு செய்தி சொல்லக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரம் என்பதாலும் இந்த படத்தில் நடிக்க சந்தோஷமாக ஒப்புக்கொண்டேன். பொதுவாக ஒரு கதாநாயகிக்கு சினிமாவில் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து கிடைக்கும் இது போன்ற கதாபாத்திரம் எனக்கு இவ்வளவு சீக்கிரமே கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது..

    நான் நடிக்கவே இல்லை

    நான் நடிக்கவே இல்லை

    இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக எந்த ஹோம் ஒர்க்கும் பண்ணவில்லை. பள்ளிக்கூடம் படிக்கிற காலத்திலேயே நான் ஹோம் ஒர்க் எல்லாம் பண்ணவே மாட்டேன். சொல்லப்போனால் இந்த படத்தில் நான் நடிக்கவேயில்லை. இயக்குநர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தின் ஸ்கிரிப்டை கொடுத்ததும் அதை முழுவதுமாக படித்து அந்த சாமந்தி கேரக்டராக நான் இருந்தால், எப்படி உணர்ந்து இருப்பேனோ அதையே ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக பிரதிபலித்து இருக்கிறேன்.

    பிளஸ் பாயிண்ட்

    பிளஸ் பாயிண்ட்

    என்னை பார்ப்பவர்கள் நேரில் பார்க்கும்போது ஒரு மாதிரியும் திரையில் பார்க்கும்போது வேறு மாதிரியும் இருப்பதாக சொல்வார்கள். அதுவே எனக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் தான். அதனால் எந்த படத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே எளிதில் மாறிவிட முடிகிறது. அந்தவகையில் இந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரம் என்றாலும், நான் கஷ்டப்பட்டு எதையுமே பண்ணவில்லை. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்தே செய்துள்ளேன்.

    கட்டாயம் பார்க்க வேண்டும்

    கட்டாயம் பார்க்க வேண்டும்

    இந்த படத்தை ஒரு விஷயத்துக்காக மட்டும் அல்ல, பல விஷயங்களுக்காக கட்டாயம் பார்க்க வேண்டும்.. மிகமிக அவசரமான இந்த உலகில் நம் அருகில் உள்ளவர்களை, அவர்கள் படும் கஷ்டங்களை கண்டுகொள்ளாமலே பெரும்பாலும் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஒருநிமிடம் நின்று, பிரச்சனையான சமயத்தில் அதை எப்படி எதிர்கொள்வார்கள் என நினைத்து அவர்களுக்கு ஆறுதலாக உதவச் சென்றாலே நாட்டில் பல பிரச்சனைகள் தோன்றவே தோன்றாது.

    வாய்ப்புகளை ஏற்கவில்லை

    வாய்ப்புகளை ஏற்கவில்லை

    அதேபோல சின்ன சின்ன படங்கள் தானே என்று தயவு செய்து ஒதுக்காதீர்கள். அதில்தான் வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். இந்த படமும் அப்படித்தான். இந்த படம் வெளியான பின்பு மக்கள் அதற்கு கொடுக்கும் வரவேற்பை பொருத்து, இனி எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து அதன் பிறகே படங்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறேன். அதனாலேயே என்னைத் தேடி வந்த சில வாய்ப்புகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன்" என்கிறார் ஸ்ரீபிரியங்கா.

    English summary
    Actress Sri Priyanka shared her experience in working with Producer, director Suresh Kamatchi's Miga Miga Avasaram movie. She is eagrly waiting the movie's release.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X