எவ்ளோ தின்னாலும் குண்டாகவே மாட்றீங்களே ஏன்? ரசிகர்கள் கேள்விக்கு டிவி நடிகை கொடுத்த அட்டகாச பதில்!

மைகோனாஸ்: தான் ஒரு சரியான தீனி பண்டாரம் என பல மேடைகளில் சொல்லி வரும் லவ் ஐலாண்ட் ரியாலிட்டி ஷோ பிரபலம் தனது ஸ்லிம் ரகசியம் குறித்த ரசிகர்களின் கேள்விக்கு அட்டகாசமாக பதில் அளித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இங்கிலாந்தின் பிரபல டிவி ஷோவான லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்வதேச புகழை அடைந்தவர் சாரா மெக்டெர்மாட்.

கிரீஸ் நாட்டின் மைகோனாஸ் நகரில் தனது காதலருடன் தற்போது இன்ப சுற்றுலா செய்து வருகிறார்.

வாட்டர் பேபி

வாட்டர் பேபி

கடலும், நீச்சல் குளங்களும் தான் மாடல் அழகிகளின் முதல் ஃபேவரைட்டாக இருக்கிறது. சுற்றுலா செல்வதே இஷ்டத்துக்கு குளித்து மகிழத்தான் என பலரும் கடற்கரை தீவுகளை தேடி செல்கின்றனர். தற்போது தனது காதலர் சாம் தாம்சனுடன் கிரீஸ் நாட்டின் மைகோனாஸ் தீவு நகரத்தில் உள்ள சாண்டா மெரினா சொகுசு ரெசார்ட்டில் ஹாலிடேவை கொண்டாடி வருகிறார்.

ஸ்ட்ராப்லஸ் கவுனில் செம அழகாக

ஸ்ட்ராப்லஸ் கவுனில் செம அழகாக

லவ் ஐலாண்ட் ரியாலிட்டி ஷோ, எக்ஸ் ஃபேக்டர் நிகழ்ச்சியில் பாடி அசத்தல் என தனது திறமைகளை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள பிரபல டிவி நடிகை சாரா மெக்டர்மாட், நீல நிற ஸ்ட்ராப்லஸ் கவுனில் கடற்கரை அருகே படு கவர்ச்சியாக நின்றபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு, பல லட்ச லைக்குகளை தனதாக்கினார்.

உதட்டில் முத்தம்

உதட்டில் முத்தம்

லவ் ஐலாண்ட் நிகழ்ச்சியில் காதலித்து வந்த ஆடம் எனும் சக போட்டியாளரை கடந்த பிப்ரவரி மாதம் கழட்டி விட்ட இந்த ரியாலிட்டி ஷோ பிரபலம் தற்போது தனது புதிய காதலர் சாம் தாம்சனின் பிறந்தநாளை முன்னிட்டு க்ரீஸ் நகரை சுற்றிப் பார்த்து வருகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் லிப் லாக் அடிக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார் சாரா.

வாரம் முழுவதும் பிகினியில்

வாரம் முழுவதும் பிகினியில்

இரு தினங்களுக்கு முன்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணையத்தின் சூட்டை அதிகரிக்கும் புகைப்படங்களை பதிவிட்ட நடிகை சாரா, இந்த வாரம் முழுவதும் பிகினி உடை அணிந்தபடியே வாழப் போவதாக பதிவிட்டுள்ளார். அவரது ரசிகர்கள், இரவில் காதலரை ஏமாற்றாதீர்கள் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

வெள்ளை பிகினியில்

வெள்ளை பிகினியில்

இந்நிலையில், தற்போது வெள்ளை நிற பிகினியில் ஓவர் கிளாமராக இருக்கும் தனது புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை சாரா மெக்டெர்மாட். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், எப்படி எவ்வளவு தின்னாலும், குண்டாகவே மாட்றீங்க, செம ஸ்லிம் ஃபிட் மாடலாகவே இருக்கீங்க என்ற கேள்வியை முன் வைத்துள்ளனர்.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

உணவுப் பிரியையான சாரா மெக்டர்மாட், பீட்சா முதல் கிடைக்கும் அனைத்து உணவுகளையும் ஒரு கை பார்த்து விடுவார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதுமே உணவு உண்ணும் புகைப்படங்கள் ஏகபோகமாக ஆக்கிரமித்து இருக்கும். அந்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த சாரா, நான் ஜெனிடிக் லாட்டரியை வின் பண்ணியிருக்கேன் என்றும், அது என் மரபு அணுவிலே இருக்கிறது என நினைக்கிறேன். நான் இதுவரை டயட்டே இருந்தது இல்லை என அட்டகாசமாக பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X