தமிழ் சினிமாவில் ஹெச். வினோத் கொண்டாடப்படுவார்னு முன்னாடியே தெரியும்... நடிகர் நட்டி சொன்ன தகவல் !
சென்னை : ஹெச் வினோத் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தி வருகிறது
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று,வலிமை என தனது ஒவ்வொரு படங்களிலும் மிரட்டிய வினோத் அடுத்ததாக மீண்டும் அஜித்துடன் இணைந்து உள்ளார்
இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் நெட்டி ஹெச் வினோத் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுவார்னு முன்னாடியே தெரியும் என பெருமிதமாக பேசியுள்ளார்

உண்மை சம்பவங்களின் அடிப்படையில்
தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களில் ரசிகர்களின் பேவரைட் இயக்குநர் என்ற இடத்தை பிடித்துள்ளார் இயக்குநர் ஹெச். வினோத். சதுரங்க வேட்டை என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே வெற்றி இயக்குநர் என்ற முத்திரையை பதித்தார்.
உண்மையில் நடந்த சில சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட சதுரங்க வேட்டையில் நடிகர் நட்டி ஹீரோவாக நடித்திருப்பார் இயல்பான காட்சி அமைப்பில் நம்பத்தகுந்த பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது அதை தொடர்ந்து மீண்டும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட தீரன் அதிகாரம் ஒன்று ரசிகர்களை மிரட்டியது

தமிழில் ரீமேக் செய்தார்
இந்த நிலையில் மூன்றாவது படத்திலேயே அஜித்துடன் கூட்டணி அமைத்த ஹெச். வினோத் இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்தார். இப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது குறிப்பாக பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.

ஹாலிவுட் தரத்தில் ஸ்டைலிஷாக
மீண்டும் வினோத் அஜித் போனிகபூர் கூட்டணியில் இணைந்த வலிமை திரைப்படம் இரண்டரை ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வந்தது இந்தியா முழுவதும் படமாக்கப்பட்ட வந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்புக்கு பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை வலிமை பூர்த்தி செய்யவில்லை என்றாலும் ஹாலிவுட் தரத்தில் மிகவும் ஸ்டைலிஷாக பிரமிக்க வைக்கும் சண்டைக் காட்சிகளுடன் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது

ஹெச். வினோத் கொண்டாடப்படுவார்னு தெரியும்
அடுத்ததாக மீண்டும் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் 61 வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று கொண்டுள்ளது. இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய நடிகர் நட்டி ஹெச். வினோத் தமிழ் சினிமாவில் கொண்டாடப்படுவார்னு முன்னாடியே தெரியும் என வினோத்தை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











