படம் Flop ஆகுமுன்னு தெரிஞ்சே தான் எடுத்தேன்!

சென்னை : சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம்

தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்த இவர் இப்பொழுது விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் தன்னுடைய முதல் படம் தோல்வி ஆகும் என்று தெரிந்துதான் அப்படத்தை இயக்கியதாக பொன்ராம் வெளிப்படையாக பேசியுள்ளார்.

முழுக்க வில்லேஜ்

முழுக்க வில்லேஜ்

வில்லேஜ் பாய்,சிட்டி பாய் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக பொருந்தும் சிவகார்த்திகேயனுக்கு திரைத் துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார் . வருத்தப்படாத வாலிபர் சங்கம் முழுக்க முழுக்க வில்லேஜ் கதை களத்தில் வெளியானது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம்

இயக்குனர் பொன்ராம் இந்த படத்தை சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தன்னுடைய சொந்த ஊரில் எவ்வாறெல்லாம் நடக்குமோ அதை அப்படியே வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காட்டி இருப்பார். பார்ப்பதற்கு மிகவும் எதார்த்தமான கதையில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் என இருவருக்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்து இருப்பார். சிவகார்த்திகேயன் சூரி காமெடி இந்த படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது. இயக்குனர் எம் ராஜேஷ் இப்படத்திற்கு வசனம் எழுதியிருந்தார்.

டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை

டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை

வருத்தப்படாத வாலிபர் சங்கம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து பொன்ராம் சிவகார்த்திகேயன் ரஜினி முருகன், மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். ஹேட்ரிக் வெற்றிகளை கொடுத்த இந்த கூட்டணியை நான்காவது முறையாக இணையும் என எதிர்பார்த்தனர்.ஆனால் இப்பொழுது பொன்ராம் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து தயாரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை. இதில் நடிகை அனுகீர்த்தி வாஸ் கதாநாயகியாக நடித்து.

flop ஆகும்ன்னு தெரியும்

flop ஆகும்ன்னு தெரியும்

இந்த நிலையில் பொன்ராம் தனது முதல் படம் திருத்தம் தோல்வி பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். திருத்தம் படத்தின் கதையை முதலில் ஜீவன் இடம் தான் பொன்ராம் கூறியுள்ளார். அது ஒரு சில காரணங்களால் நடக்க முடியாமல் போக பின் இயக்குனர் ஹரி குமார் ஹீரோவாக நடித்திருந்தார். திருத்தம் படம் உருவானபோதே இயக்குனர் எம் ராஜேஷ் இந்த படம் ஒர்க் அவுட் ஆகாது தோல்விதான் அடையும் என பொன்ராம் இடம் கூறியுள்ளார். இருந்தாலும் இந்த படம் flop ஆகும் என்று தெரிந்தேதான் இயக்கினார் அதன் பலனாக திருத்தம் வெளியாகி ஐந்து வருடங்கள் கழித்துதான் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக பொன்ராம் தனது வெற்றிப் பாதை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X