twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பல்கலைக்கழகம்.. சினிமாவின் அர்த்தத்தை அங்குதான் கற்றேன்: குட்டி ரேவதி மகிழ்ச்சி

    ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து தான் சினிமாவின் அர்த்தத்தை கற்றுக்கொண்டதாக குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.

    |

    சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து தான் சினிமாவின் அர்த்தத்தை கற்றுக்கொண்டதாக பாடலாசிரியர் குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.

    மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கியுள்ள படம் சிறகு. ஹரிகிருஷ்ணன், அக்ஷிதா ஆகியோர் முக்கிய கதையின் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துள்ளனர்.

    அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர் பாடல்களை வெளியிட்டார்கள்.

    ரோஜா முருகனுக்கு விரதம் இருந்து... காவடி தூக்கி....அரோகரா...! ரோஜா முருகனுக்கு விரதம் இருந்து... காவடி தூக்கி....அரோகரா...!

    அழகான கதை:

    அழகான கதை:

    விழாவில் இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது, "இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தற்கு பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம்.

    சுகமான அனுபவம்:

    சுகமான அனுபவம்:

    படப்பதிவு 30 நாட்கள் நடந்தது. வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். படப்பிடிப்பின் போது டென்ஷன் ஆகக்கூடாது, பதட்டப்படக்கூடாது, கடுஞ்சொற்கள் பயன்படுத்தக் கூடாது என முடிவு செய்தோம். எனவே படப்பதிவு ஒரு சுகமான அனுபவத்தை தந்தது.

    இரண்டு சிறகுகள்:

    இரண்டு சிறகுகள்:

    இந்த நாளில் இசையை வெளியிட வேண்டும் என்பதை படப்பிடிப்பிற்கு போகும் முன்பே திட்டமிட்டுவிட்டோம். அதன்படியே சரியாக செயல்பட்டோம். இது ஒரு அசாதாரணமான விஷயம். இந்தப்படத்தின் இரண்டு சிறகுகள் இசை அமைப்பாளரும், ஒளிப்பதிவாளரும் தான்.

    நகை வேலை:

    நகை வேலை:

    அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார். ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார்.

    பயணக்கதை:

    பயணக்கதை:

    இது ஒரு பயணக்கதை. ஒரு ஆணும், பெண்ணும் எதர்ச்சையாக சந்திக்கிறார். சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இருவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். அப்போது அந்த உறவில் ஒரு விஷயம் நடக்கிறது. அதை அவர்கள் ஏற்கிறார்களா இல்லையா என்பது தான் படம்.

    ஏ.ஆர்.ரஹ்மான்:

    ஏ.ஆர்.ரஹ்மான்:

    எனது வாழ்வில் இரண்டு முக்கியமான நபர்கள் இருக்கிறார். ஒருவர் இந்த படத்தின் தயாரிப்பாளர் மாலா மணியன். மற்றொருவர் ஏ.ஆர்.ரஹ்மான். மாலா மணியன் போன்ற ஒருவரை சினிமாவில் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியனிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.

    பல்கலைக்கழகம்:

    பல்கலைக்கழகம்:

    ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து தான் நான் சினிமாவின் அர்த்தத்தை கற்றுக்கொண்டேன். அவர் ஒரு பல்கலைக்கழகம். ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்போது, சினிமாவின் பேருவத்தை புரிந்துகொண்டேன். அவரிடன் கற்றுக்கொண்டதை தான் இந்த படத்தில் ரசனை மற்றும் கருத்தியல் ரீதியாக, ஒவ்வொருவர் மூலம் செய்திருக்கிறேன்", என அவர் கூறினார்.

    Read more about: cinema
    English summary
    While speaking in the audio launch of Siragu, director and poet Kutti Revathy said that music director A.R.Rahman is her cinema mentor.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X