அஜித் பற்றி சுவாரஸ்யமான தகவல் சொன்ன கணேஷ் வெங்கட்ராமன்

By Siva

சென்னை: அஜித் பற்றிய சுவராஸ்யமான விஷயம் ஒன்றை தெரிவித்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.

த்ரிஷா நடிப்பில் வெளியான அபியும் நானும் படத்தில் ஜோகிந்தர் சிங்காக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் கணேஷ் வெங்கட்ராமன். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றெல்லாம் அடம்பிடிக்காதவர் அவர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமான கணேஷை அவரின் செயல்களால் பலருக்கும் பிடித்துவிட்டது.

பார்ட்டி

பார்ட்டி

கணேஷ் நடிக்க வந்த புதிதில் இயக்குனர் ப்ரியதர்ஷனின் பிறந்தநாள் விழாவுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றால் அவரை யாருக்கும் தெரியவில்லை. அதனால் யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. இது என்னடா இப்படி ஆகிவிட்டதே யாரிடம் போய் பேசுவது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்திருக்கிறார் கணேஷ்.

அஜித்

அஜித்

யாரையும் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த கணேஷின் தோளில் ஒருவர் கை போட அவர் திரும்பிப் பார்த்தால் அது வேறு யாரும் அல்ல அஜித். யாருக்குமே அடையாளம் தெரியாத கணேஷை அடையாளம் கண்டுகொண்டதுடன் திரையுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார் அஜித். இதை கேட்டு கணேஷுக்கு பெரு மகிழ்ச்சி ஆகிவிட்டது.

தோல்வி

தோல்வி

தோளில் கையை போட்டவுடன் அஜித் நடையை கட்டிவிடவில்லை. கணேஷிடம் சினிமா துறை பற்றி பேசியுள்ளார். தனது வெற்றி, தோல்வி குறித்து அவரிடம் பகிர்ந்துள்ளார். அஜித்தின் பணிவு, பாரபட்சம் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக பழகும் விதம், பெருந்தன்மை ஆகியவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கணேஷ் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் ஒரு ஜென்டில்மேன் என்றால் அது கணேஷ் என்று தாராளமாக கூறலாம். இம்முறை டேனியின் காதலி வந்து அவருக்கு முத்த மழை பொழிந்தபோது பார்வையாளர்கள் கணேஷும், நிஷாவும் எவ்வளவு டீசன்டாக நடந்து கொண்டார்கள் என்று தான் பேசினார்கள். யார் சண்டை போட்டு புறம் பேசினாலும் தன்மையாக நடந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தவர் கணேஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X