தோனி கோஹ்லி ரெண்டு பேரையும் பிடிக்கும்- காஜல் #AskKajal ஹேஷ்டாக்

Recommended Video

பெண்கள் அலங்கார பொருட்கள் கண்காட்சியை துவங்கி வைத்த நடிகை காஜல் | FILMIBEAT TAMIL

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் #AskKajal என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தனது ரசிகர்களிடம் கேள்வி செக்ஷன் நடத்தினார். அதில் ரசிகர்களில் ஒருவர் காஜலுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கேட்டதற்கு, தனக்கு தோனி மற்றும் விராட் கோஹ்லி இவர்கள் இருவரையும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் சமீபத்தில் நடித்த கோமாளி திரைப்படத்திற்கு பிறகு புகைப்படம் எடுப்பதில் பிஸியாக இருக்கிறார். நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்கிற மும்பை சாகா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

I like both Dhoni and Virat Kohli-Kajal Aggarwal

மும்பை சாகா திரைப்படத்தை தவிர, நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 மற்றும் இந்தி திரைப்படமான குயின் தமிழ் ரீமேக்கிலும் மற்றும் நடிகர் மஞ்சு விஷ்ணுவுடன் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலும் நடித்துவருகிறார்.

சில நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடையே உரையாடியபோது, அவர் ரசிகர் ஒருவர் நடிகர் பிரபாஸ் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்கு காஜல் அகர்வால் பிரபாஸ் தேர்வு செய்யும் திரைப்படத்தை விரும்புகிறேன் என்றும் அவர் தெலுங்கு சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றுள்ளார் என்று கூறியுள்ளார்.

அதுபோல மீண்டும் சமீபத்தில் காஜல் அகர்வால் ட்விட்டர் பக்கத்தில் #AskKajal என்ற ஹேஷ்டேக்கின் கீழ் தனது ரசிகர்களுக்காக கேள்வி செக்ஷன் நடத்தினார். அதில் ரசிகர்களில் ஒருவர் காஜலுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் பற்றி கேட்டார்.

அதற்கு காஜல் அகர்வால், ஒன்றல்ல அல்ல இரண்டு பெயர்களைக் கூறியுள்ளார். பல கோடி இந்திய ரசிகர்களைப் போலவே, எம்.எஸ். தோனி மற்றும் விராட் கோஹ்லி இவர்கள் இருவரையும் பிடிக்கும் என்று கூறினார்.

உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் இந்திய தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சோகத்துடன் இருந்தனர். உலக கோப்பை கிரிக்கெட் விளையாட்டில் இந்தியா வெற்றிபெற முடியவில்லை என்றால் என்ன T20 விளையாட்டில் வெற்றி பெறுவதற்காக கேப்டன் விராட் கோஹ்லி அவருடைய விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி விளையாடி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X