எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. பளிச்சின்னு சொன்ன அதிதி ஷங்கர்.. நல்லா தெளிவா இருக்காங்களே!
சென்னை: சூர்யாவின் 2டி என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
இந்த படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.
இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் வழக்கமான பார்முலா என்றாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. நடிகையாக அறிமுகமாகியுள்ள ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு எந்த நடிகை பிடிக்கும் என்ற விவரம் வெளிவந்துள்ளது.

எதார்த்தமான நடிப்பால் வெற்றி
அதிதி ஷங்கர் தனது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். சூர்யாவின் 2 டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம், வழக்கமான ஃபார்முலாவாக இருந்தாலும், கிராமத்து கதை என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் ரசித்து வருகின்றனர். இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

ஹிட் கொடுத்த முதல் படம்
கார்த்தியுடன் இணைந்து நடித்த அதிதி ஷங்கருக்கு முதல் படமே ஹீட் அடித்துள்ளது. நடிகை அதிதி சங்கர் நடிகையாக மட்டுமில்லாமல் பாடகியாகவும் இந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார். தான் முதல் படமே ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது என்ற குஷியில் உள்ள அதிதி சங்கர். படம் ரிலீசுக்கு முன்பு பல ப்ரொமோஷன்களில் ஈடுபட்டு வந்தார்.

சர்ச்சையில் சிக்கிய அதிதி
பெரிய இயக்குநரின் மகள் என்பதால் இவருக்கு ஈஸியாக பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விடுகின்றது என்று பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதற்கான பதிலையும் தெளிவாக கூறி தப்பித்து உள்ளார் அதிதி. அதாவது இயக்குநரின் மகள் என்பதால் முதல் பட வாய்ப்பு வேண்டுமானால் கிடைக்கலாம், ஆனால் என் நடிப்பு மக்களுக்கு பிடித்தால் மட்டுமே அடுத்தடுத்து வாய்ப்புகள் வரும் என்று கூறி சுதாரித்து கொண்டார் அதிதி.
Recommended Video

இவங்களைத்தான் பிடிக்கும்
பல ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ள அதிதி, தனக்கு பிடித்த நடிகை பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்று கேட்ட கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் சமந்தா என்று பளிச்சென்று பதில் சொல்லி உள்ளார். இதை கேட்டசமந்தாவின் ரசிகர்களும் அதிதி ஷங்கரை பாராட்டி வருகின்றனர். தனக்கு தகுதியான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வரும் அதிதி, விருமன் படம் ரிலீசுக்கு முன்பே சிவகார்த்திகேயனுடன் மாவீரன் திரைப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











