பெண்களின் உடம்பு தான் பிடிக்கும்.. மூளை பிடிக்காது.. மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால் வர்மா!

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா மீண்டும் தனது சர்ச்சையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

பெண்களின் உடம்பு தான் பிடிக்கும், மூளை பிடிக்காது என அவர் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன.

ராம் கோபால் வர்மாவின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளத்தில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சர்ச்சை இயக்குநர்

சர்ச்சை இயக்குநர்

டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என ஏகப்பட்ட முன்னணி நடிகர்களை இயக்கி பிரபல இயக்குநர் எனும் பெயரை எடுத்த ராம்கோபால் வர்மா, தனது சர்ச்சையான கருத்துக்களையும், சினிமா திரைக்கதைகளாலும் சர்ச்சை இயக்குநர் என்றே நெடுங்காலமாக அறியப்பட்டு வருகிறார்.

சூர்யா படம்

சூர்யா படம்

ரங்கீலா படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான ராம் கோபால் வர்மா, அமிதாப் பச்சனின் சர்கார், சூர்யாவின் ரத்த சரித்திரம் 2ம் பாகம் என ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். வீரப்பனின் வாழ்க்கை வரலாறு படத்தையும், என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இயக்கியும் சர்ச்சையை கிளப்பினார்.

ஆபாச படம்

ஆபாச படம்

இந்நிலையில், சமீப காலமாக ஆபாச படங்களாக இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. கடந்த ஆண்டு ஆபாச பட நடிகை மியா மல்கோவாவை வைத்து கிளைமேக்ஸ் எனும் ஆங்கில படத்தை இயக்கி இருந்தார். முழு நிர்வாண காட்சிகள் படத்தில் இடம்பெற்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

நேக்கட்

நேக்கட்

இந்த லாக்டவுனில் செம பிளான் போட்டு ஏகப்பட்ட சிறு பட்ஜெட் ஆபாச படங்களை இயக்கி ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்து கல்லா கட்டி வருகிறார். 20 நிமிட படமான நேக்கட் படமும் கடந்த ஆண்டு வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், பவர்ஸ்டார், திரில்லர், கொரோனா வைரஸ் உள்ளிட்ட படங்களையும் தனது RGV World ஒடிடி தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சேலை ஆபத்து

லட்கி எனும் படத்தை தற்போது நடிகை பூஜா பட்டை வைத்து இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. அந்த படத்தின் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் ராம் கோபால் வர்மா, சேலை ஆபத்து இல்லை என்று யார் சொன்னா? என்ற கேள்வியுடன் படு செக்ஸியாக சேலை அணிந்து புஜா இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

பெண்களின் உடம்பு தான் பிடிக்கும்

பெண்களின் உடம்பு தான் பிடிக்கும்

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், பெண்களின் உடம்பு தான் பிடிக்கும், அவர்களின் மூளை தனக்கு பிடிக்காது, மூளைக்கு பாலினம் கிடையாது, பெண்களின் உடலில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது என தன்னுடைய Guns and Thighs புத்தகத்தில் எழுதி சர்ச்சையை கிளப்பிய கருத்துக்களை மீண்டும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

சுசித்ராவின் திருமண ஆசை

சுசித்ராவின் திருமண ஆசை

சமீபத்தில் நடிகையும் பாடகியுமான சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி இயக்குநர் ராம் கோபால் வர்மாவை திருமணம் செய்து கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தியது குறித்தும் அந்த பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. ஆனால், அதற்கு பதில் அளித்தய் ராம் கோபால் வர்மா, அவரை எனக்கு 15 வருடமாக தெரியும், அவர் சும்மா விளையாடுகிறார். மேலும், தனக்கு தற்போது திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X