சிவகார்த்திகேயனின் செஞ்சிட்டாலே பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நடிகர் விஜய் சேதுபதி!

சென்னை :நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மாபெரும் வெற்றிப் படமானது

Recommended Video

Don Movie Review | Yessa ? Bussa ? | டான் | Sivakarthikeyan | S. J. Suryah | Filmibeat Tamil

அடுத்ததாக பிசாசு 2 மற்றும் விடுதலை உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசிய விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனின் செஞ்சிட்டாளே பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

தெலுங்கில் வசூல் சாதனை

தெலுங்கில் வசூல் சாதனை

நடிகர் விஜய் சேதுபதி எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதமாகப் பொருந்த கூடியவர். குறிப்பாக கேங்ஸ்டர் கதை களத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது ஹீரோவாக நடிக்கும் அதேசமயம் வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் வியக்க வைக்கும் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. தெலுங்கில் வெளியான உப்பன்னா படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியிருப்பார். இந்த திரைப்படம் தெலுங்கில் வசூல் சாதனை படைத்தது.

பாலிவுட்டிலும் படங்களில்

பாலிவுட்டிலும் படங்களில்

தென்னிந்தியாவை தொடர்ந்து பாலிவுட்டிலும் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் விஜய் சேதுபதி தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் பிரமாண்ட வெப் சீரிஸில் ஷாகித் கபூருடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது

ரெமோ செஞ்சிட்டாலே

ரெமோ செஞ்சிட்டாலே

நானும் ரவுடிதான் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி விக்னேஷ் சிவன் உடன் கூட்டணி அமைத்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். நயன்தாரா மற்றும் சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருக்க முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது மாபெரும் வெற்றி பெற்றது. விக்னேஷ் சிவன் தன்னுடைய படங்களுக்கு பொதுவாக பாடல்களை தானே எழுதி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மற்ற படங்களுக்கும் ஒரு சில பாடல்களை எழுதியுள்ளார் இந்த வகையில் சிவகார்த்திகேயனின் வித்தியாசமான நடிப்பில் வெளியான ரெமோ படத்தில் செஞ்சிட்டாலே பாடலையோ விக்னேஷ் சிவன் எழுதியிருப்பார்.

பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

பாடல் வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி அதில் ரெமோ படத்தில் செஞ்சிட்டாலே பாடலில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும் விக்னேஷ் சிவன் மிக அருமையாக எழுதி இருப்பார் போற போக்கில் ஒரு லுக்கு விட்டு என தொடங்கும் அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே போல நானும் ரவுடிதான் படத்தில் கண்ணான கண்ணே பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் மிக அழகாக எழுதியிருப்பார் என அந்த நேர்காணலில் விஜய் சேதுபதி விக்னேஷ் சிவனின் வரிகளை வியந்து பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X