எஞ்சாய் பண்ணி பார்த்தேன்... சிரித்தேன்.. ஆஹா.. தளபதியே புகழ்ந்துட்டாரே!

சென்னை : நான் சிரித்தால் டிரைலரை, ரொம்ப எஞ்சாய் பண்ணி பார்த்து சிரித்ததாக தளபதி விஜய் கூறியுள்ளார். இந்த தகவலை திங்க் மியூசிக் இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தின் டிரைலர் கடந்த ஜனவரி 4ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்து இருக்கிறார்.

 I liked the trailer naan sirithal movie

இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் ஒரு சலசலப்பு சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டது. அது என்னவென்றால் சமூக வலைத்தளங்களில் இருக்கும் தல மற்றும் தளபதி ரசிகர்கள் ஏற்படுத்தியது தான். இந்த படத்தின் கதை கரு என்னனா, சிரிப்பு நோயால் பாதிக்கபட்டிருக்கும் கதாநாயகன் ஆதி என்ன என்ன பிரச்சினைகளுக்கு ஆளாகுகிறான் என்பது தான் .

இந்த முன்னோட்டத்தில் ஒரு காட்சியில் திரையரங்கில் விஜயின் படத்தை பார்த்து கொண்டு இருப்பார் ஆதி அந்த காட்சியில் மிக அழுத படி விஜய் நடித்து கொண்டு இருப்பார் அப்போது ஆதி தன் நோய் காரணமாக சிரிப்பார் அதே போல மற்றொரு காட்சியில் அஜித் பட சீன் இருக்கும் அதே போல அதைப்பார்த்தும் சிரிப்பார் .

 I liked the trailer naan sirithal movie

இவ்விரண்டு காட்சிகளை பார்த்து கோபம் கொண்ட விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஆதியை கிண்டல் செய்து வந்தனர். தற்போது நடிகர் விஜயிடம் இந்த தகவலை பற்றி கேட்டதற்கு, நான் ரொம்ப எஞ்சாய் பண்ணி பார்த்து சிரித்தது, நான் சிரித்தால் படத்தின் டிரைலர் தான் என்று கூறியுள்ளார்.

இந்த தகவலை திங்க் மியூசிக் இந்தியா தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளது. இதனை வேறு யாரும் கூறியிருந்தால் பொய் என்று கடந்து சென்றிருக்கலாம் ஆனால் திங்க் மியூசிக் நிறுவனமே கூறியிருக்கிறது என்றால் உண்மை தான் என்று அதனை விஜய் ரசிகர்கள் தற்போது பெருமையாக பகிர்ந்து வருகிறார்கள்.

கக்க பெக்க என்ற குறும்படத்தின் மூலம் அறிமுகமாகி அந்த குறும்படத்தின் கதை கருவை தற்போது படமாக்கி இருக்கிறார் ராணா. அந்த குறும்படத்திலும் இதேபோல தல தளபதி காட்சிகள் இடம் பெற்று இருக்கும். இந்த படத்தில் ஆதி ,ஜஸ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிக்குமார் முனீஸ்காந்த்,ரவி மரியா ,படவா கோபி , சாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X