Sivakumar - எம்ஜிஆர், சிவாஜி 70 பிளஸ்ல போய்ட்டாங்க.. நான் 80 பிளஸ் வரை இருக்கேன்.. ஏன் தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகுமார் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய போது எம்ஜிஆர் மற்றும் சிவாஜி கணேசன் உள்ளிட்ட பிரபலங்கள் 70 பிளஸ் வயதில் மறைந்து விட்டனர். ஆனால், இந்த சின்னப் பையன் சிவகுமார் 80 பிளஸ் வயது வரை இருக்கிறேன் அதற்கு இதுதான் காரணம் என பேசிய வீடியோ தீயாக பரவி வருகிறது.
1941ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி காசி கவுண்டன்புதூர் எனும் ஊரில் பிறந்த சிவகுமார் ஓவியக் கலைஞனாக சாதிக்க விரும்பி சென்னைக்கு வந்த நிலையில், அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

சினிமாவில் சிவகுமார்: 1965ம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் படத்தில் அறிமுகமானவர் சிவகுமார். மோட்டார் சுந்தரம், தாயே உனக்காக, சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, காவல்காரன், கண் கண்ட தெய்வம், திருமால் பெருமை என பல படங்களில் நடிக்க ஆரம்பித்த சிவகுமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மார்க்கண்டேயன் எனும் பட்டத்திற்கும் சொந்தக்காரர் ஆனார். சினிமாவில் முருகன், கண்ணன், ராமர் என பல வேடங்கள் அணிந்து சிவகுமார் பேசும் வசனங்கள் ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்தன. கந்தன் கருணை படத்தில் சிவாஜி கணேசன் வீரபாகுவாகவும் சிவகுமார் முருகனாகவும் நடித்திருப்பார்கள்.
எம்ஜிஆர் சிவாஜியுடன்: எம்ஜிஆர் மற்றும் சிவாஜியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார் சிவகுமார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமனை தொடர்ந்து ஹீரோவாக சிவகுமார் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. அன்னக்கிளி, பத்ரகாளி, சிந்து பைரவி உள்ளிட்ட படங்களில் சிவகுமாரின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. சிவகுமாருக்கு என தனி ரசிகர் வட்டத்தையும் அந்த பட்ங்கள் உருவாக்கி கொடுத்தன.

சூர்யா, கார்த்தி: நடிகர் சிவகுமார் ஒரு கட்டத்துக்கு மேல் நடிப்பை விட்டு விட்டு கம்ப ராமாயணம் உள்ளிட்ட புராண நூல்கள் குறித்து பேச ஆரம்பித்தார். பல்வேறு கல்லூரிகள், பள்ளிகளுக்கு சென்று சொற்பொழிவு ஆற்றி உள்ளார். சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா மற்றும் இளைய மகனான கார்த்தி இருவருமே சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர்.
அதிக நாள் வாழுறேன்: நாலாம் கிளாஸ் படிச்ச எம்ஜிஆர் நாட்டை ஆண்டாரு, அவர் செய்த சாதனையை யாரும் செய்ய முடியாது. உலகத்திலேயே நடிகர் திலகம் சிவாஜி போல சிறந்த நடிகர் யாருமில்லை. அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் 70 வயசுல போய்ட்டாரு, இன்னொருத்தரு 72 வயசுல போயிட்டாரு.. இந்த சின்னப்பையன் சிவகுமார் 82 வயசு வரை இன்னும் இருக்கிறேன் அதற்கு காரணம் யோகா தான். யோகா செய்யுங்க, நல்ல பழக்கத்துடன் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இந்த உலகத்துல வாழலாம் என சிவகுமார் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.
டீ, காபி குடிக்காதீங்க: 67 வருஷமா டீ, காபி குடிப்பதை நிறுத்திட்டேன். சிகரெட், தண்ணி பழக்கம் கிடையாது. பிறர் மாது தொடர்பு கிடையாது. இரண்டு பையன் ஒரு பொண்ணு தான் பெத்தான். ஒழுக்கமாக வாழ்ந்தால் நல்லா வாழலாம். சின்ன பசங்களா இந்த டீ, காபி எல்லாம் குடிக்காதீங்க பெரியவங்க கேட்க மாட்டாங்க, தினமும் யோகா பண்ணுங்க அது உங்க உடம்பை ஆரோக்கியமா வச்சுருக்க உதவும் என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











