Just In
- 4 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 4 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 4 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 6 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்க காதலியை கொல்லாம விட மாட்டேன்: வாரிசு நடிகர் வீட்டு வாசலில் ரசிகை மிரட்டல்
மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவானின் காதலியை கொலை செய்யப் போவதாக ரசிகை ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாலிவுட் நடிகர் வருண் தவான் நடாஷா தலால் என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பட விழாக்களுக்கு வருவதும், வெளிநாட்டிற்கு செல்வதுமாக உள்ளனர்.
இந்நிலையில் ரசிகை ஒருவர் வருணின் வீட்டுற்கு வந்து அவரை சந்திக்க வேண்டும் என்று காவலாளியிடம் தெரிவித்துள்ளார்.
ஒரு ட்வீட் போட்ட காஜல்: விளாசிய நெட்டிசன்ஸ், பாராட்டிய சவ்கிதார்கள்

வருண் தவான்
வருண் கலன்க் பட விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருப்பதால் அவரை சந்திக்க முடியாது என்று காவலாளிகள் அந்த ரசிகையிடம் கூறியுள்ளனர். இதை கேட்ட அந்த ரசிகை கடுப்பாகி கூச்சலிட ஆரம்பித்துள்ளார். நான் நடாஷாவை கொலை செய்யப் போகிறேன் என்று கத்தியுள்ளார். அவரை அடக்க முடியாததால் காவலாளிகள் வேறு வழியில்லாமல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

புகார்
வருண் தவான் வீட்டு காவலாளிகள் மும்பை சான்டா க்ரூஸ் பகுதி காவல் நிலையத்தில் அந்த ரசிகை மீது புகார் அளித்துள்ளனர். வருண் தவானிடம் வாக்குமூலம் வாங்கிய பிறகு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படுமாம்.

நோட்டம்
ரசிகை ஒருவர் வருண் சார் வீட்டை வெகுநேரமாக சுற்றி சுற்றி வந்தார். இது வழக்கமான ஒன்று தான் என்பதால் நாங்கள் முதலில் கண்டுகொள்ளவில்லை. ரசிகர்கள் தங்கள் எல்லையை தாண்டி இதுவரை நடந்து கொண்டது இல்லை. ரசிகர்கள் வீட்டு வாசலில் கூடி செல்ஃபி எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால் வருண் சார் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார் என்கிறார்கள் காவலாளிகள்.

மிரட்டல்
தற்போது வருண் சார் பிசியாக இருப்பதால் அந்த ரசிகையை சந்திக்கவில்லை. ஆனால் அந்த பெண் திரும்பிச் செல்ல மறுத்து பிரச்சனை செய்தார். தன்னை தான் காயப்படுத்திக் கொள்வேன் என்று மிரட்டிய ரசிகை பின்னர் நடாஷா மேடத்தை கொலை செய்வேன் என்றார் என காவலாளிகள் தெரிவித்துள்ளனர்.